தங்க நகைக்காக கும்மிடிப்பூண்டி சுதர்சனத்தை கொன்ற 3 பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் சிறை: கோர்ட் அதிரடி
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சுதர்சனம் கொலை வழக்கில், கடந்த நவம்பர் 21ம் தேதி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.. அதில், பவாரியா கும்பலை சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார்.. இந்நிலையில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்..

62 சவரன் தங்க நகைகள்
பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.. கடந்த 2005, ஜனவரி 9ம் தேதி நள்ளிரவில், வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது.
அங்கே சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷை தாக்கி, தனி அறையில் பூட்டியது.. சத்தம் கேட்டு சுதர்சனம் மாடியில் இருந்து அலறியபடியே கீழே ஓடி வந்தபோது, துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்றது அந்த கும்பல்.. பிறகு துப்பாக்கி முனையில் குடும்பத்திலிருந்தவர்களையும் மிரட்டி 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றது.
மக்கள் பிரதிநிதியான ஒரு அமைச்சரை வீடு புகுந்து சுட்டுக் கொன்ற சம்பவம் அன்றைய தினம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டுபண்ணியது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை சுட்டுப்பிடியுங்கள் என்று ஆவேசமாக உத்தரவிட்டார்.
பவாரியா கொள்ளையர்கள்
இதையடுத்து, அன்றைய ஐஜியாக ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே நாட்களிலேயே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் என்பது உறுதியானது..
பவாரியா கொள்ளையர்கள், ஒரு பழங்குடி கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்கள்.. அதாவது நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பது, ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள பணக்கார வீடுகளில் கொள்ளையடிப்பது என வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேரும் குற்றவாளிகள்
இதையடுத்து, 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் (ஓமா), அவரது சகோதரர் ஜெகதீஷ், மற்றும் ராகேஷ், அசோக், ஜெயிந்தர் சிங் 5 பேரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேரும் உடல் நலக்குறைவால் ஜெயிலுக்குள்ளேயே மரணமடைந்த நிலையில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.
இன்று தண்டனை விவரம்
இந்த வழக்கில் 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த 21-ம் தேதி இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், பவாரியா கும்பலை சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்..
அத்துடன், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சென்னை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 24ம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். அந்தவகையில், இன்றைய தினம் தண்டனை விவரங்கள் வெளியாகி உள்ளன..
அதன்படி, ஓம்பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் ராகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 4ஆவது குற்றவாளி ஜெயில்தர் சிங்கை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications