பெருகிய வெள்ளம்...உருகிய வெல்லம்...காத்திரு பகையே.. கொந்தளிக்கும் எச். ராஜா!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஹெச்.ராஜா ஆளும் திமுக அரசை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மழையால் பெருகிய வெள்ளம்...உருகிய வெல்லம்... அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும், தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... 'காத்திரு பகையே' என்று பாஜகவின் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலும் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்றைய தினம் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையில காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மறுபுறம், அ.தி.மு.க தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. சட்டமன்றத் தேர்தல்

பாஜக தனித்து போட்டி
நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிளவு பெற்றது. பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக களமிறங்கின. திமுகவை பாஜக அதிகம் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தது.

எச்.ராஜா பேஸ்புக் பதிவு
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் எச். ராஜா, திமு.கவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், 'பெருகிய வெள்ளமும்' 'உருகிய வெல்லமும்', 'கருகிய கால் கொலுசும்', "பல்லிக்குப் பாடை கட்டிய புளியும்", "குறுமிளகு என்று சொல்லிக் கொடுத்த பப்பாளி விதைகளும் என்று திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை கிண்டலடித்துள்ளார்.

காத்திரு பகையே
தொடர்ந்து அவர் தனது பேஸ்புக் பதிவில், "மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும்', "அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும்', "தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... 'காத்திரு பகையே' என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications