தாம்பரம் துள்ளுது.. பீச் ரோட்டில் குட்நியூஸ்.. நாளைக்கு 150 வருதாமே.. அரசின் சர்ப்ரைஸ்.. சென்னை குஷி
சென்னை: திடீரென சென்னையில் ஒரேடியாக 15 புறநகர் ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகளுக்கு அசவுகரியத்தை தந்து வருகிறது. என்ன காரணம்?
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக, அவ்வப்போது ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. இதில், முக்கிய போக்குவரத்து நிகழும் மாநகராக சென்னை திகழ்ந்து வருகிறது. எனவேதான், புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி இதற்கான மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

பணிமனை: அந்த வகையில் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்த ரயில்களின் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது.
"பிப்ரவரி 17ம் தேதி இரவு 10:25 மணி முதல் பிப்ரவரி 18ம் தேதி காலை 4:30 மணிவரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாகவும், 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.
ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையம், ஆவடி ரயில் நிலையம், மூர் மார்க்கெட் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நின்று செல்லாது என்றும், பயணிகள் இதற்கு ஏற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், திடுதிப்பென்று இப்படி மொத்தமாக இத்தனை ரயில்களின் சேவைகளும் இல்லாதது, பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது. இதனால், வழக்கமாக இந்த ரூட்களில் செல்லும் பயணிகள் கூடுதல் அவதிக்கும், அலைச்சலுக்கும் ஆளாக நேரிடுமே என்ற கலக்கமும் சூழ்ந்து.
அசத்தல் அறிவிப்பு: ஆனால், தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரனமாக நாளை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, தாம்பரம் – சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று இரவு 11.45 மணி முதல் 22-ம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே சேவை: வார இறுதி நாட்கள் என்றாலே, சென்னைவாசிகளின் பயணங்கள் அதிக அளவில் நடைபெறும். அந்தவகையில், தற்போது விடுமுறை என்பதுடன், தெற்கு ரயில்வேயின் சேவையும் இல்லாத பட்சத்தில், சென்னைவாசிகள் மேலும் திணறிவிடக்கூடும். அதனால்தான், தமிழக போக்குவரத்து துறை ஓடோடி வந்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பயணிகளுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications