Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்.. ஆசிரியர்களுக்கு குஷி.. தேர்தல் பணியாற்றுவோருக்கு ஊதியம்: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் அன்று பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவதற்காக, 58 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1,700 முதல், கடை நிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளனர். இது தொடர்பான உத்தரவை அரசு பிறிப்பித்திருக்கிறது.

தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு மையத்தில் பணி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Happy news for Tamil nadu Government Employees and The salary of election workers has been announced by TN Gov

சிறப்பு பயிற்சி: அந்தவகையில், தற்போதைய மக்களவைத் தேர்தல் பணியில் கோவை மாவட்டத்தில் 15,860 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதற்கெனவே சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. இன்னும் 2 நாளில் பிரச்சாரங்களும் ஓயப்போகின்றன.. 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது..

19 வாக்குப்பதிவு என்பதால், 17-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும். தேர்தல் தினத்தன்று நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆசிரியர்கள்: வழக்கமாக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.. அந்தவகையில் இந்த முறையும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.. எனவே, அன்றைய தினம், அந்தந்த ஓட்டுச்சாவடியிலேயே, தேர்தல் பணி சான்றினை பெற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வாக்களிக்கலாம் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: இந்நிலையில், தேர்தல் தினத்தன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 58 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1,700 முதல், கடை நிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் சம்பள விவரமும் வெளியாகியிருக்கிறது. அந்த விவரங்கள் இதுதான்:

Office Assistant ₹700,

Counting Supervisor ₹850,

Counting Assistant 650,

Micro Observer ₹1000,

Sector Magistrate ₹1500,

Asst. Zonal Officer ₹1000,

Reception Officer ₹800,

Cashier ₹800,

VAO ₹800,

Village Assistant Instructors ₹800.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+