Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திவாகரன் வெச்ச புள்ளி.. கோலம் போடும் சசிகலா.. அசராத தினகரன்! விரிவடையும் மன்னார்குடி குடும்ப விரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு திவாகரன் குறித்த செய்தி ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.. அது என்ன?

சசிகலாவின் சகோதரர் திவாகரன்.. கடந்த வருடம் திவாகரனை பற்றின செய்திகள் பெருமளவு மீடியாக்களில் கசிந்துவந்ததை யாராலும் மறக்க முடியாது.

Has disaffection started for Divakaran and AMMK TTV Dinakaran and what are Sasikala and Edappadi Palaniswami going to do

ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், மூத்த தலைவருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் கடந்த வருடம் தஞ்சையில் நடந்தது.. இந்த கல்யாணத்துக்கு சசிகலா வரப்போவதாக சொன்னார்கள்.. காரணம், வைத்திலிங்கம் மீது அபரிமிதமான நம்பிக்கையை சசிகலா வைத்திருப்பதால், எப்படியும் கல்யாணத்துக்கு வந்துவிடுவார் என்று நம்பப்பட்டது.

அதுமட்டுமல்ல, தினகரன் + சசிகலா இடையில் இணக்கமான சூழல் இல்லாததால், இவர்கள் 3 பேருமே அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும், 3 பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை ஒன்றாக சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின..

சசிகலா: ஆனால், அத்தனை கணக்குகளும் சுக்குநூறாக உடைந்துபோனது.. உடல்நிலை சரியாததால், அந்த கல்யாணத்துக்கு தன்னால் வரமுடியாது என்று சசிகலா தரப்பில் சொல்லப்பட்டுவிட்டதாம். ஆனால், திருமணத்தக்கு சசிகலா வரமுடியாமல் போனதற்கு முக்கிய காரணமே திவாகரன்தான் என்ற சலசலப்பு கிளம்பியது.

காரணம், எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருக்கிறாராம்.. இதெல்லாம் தெரிந்தும்கூட, திவாகரனுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வைத்திலிங்கம்.. அப்படியிருந்தும்கூட, தானும் கலந்து கொள்ளாமல், சசியையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று திவாகரன் தடுத்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஓபிஎஸ்: இப்படித்தான், ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாட்டிலும் சசிகலாவை கலந்து கொள்ளாமல் தடுத்தது திவாகரன் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே திவாகரன் ஒவ்வொருமுறையும் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.. அவ்வளவு ஏன்? சசிகலா தன்னை புறக்கணிப்பதற்கு காரணமும் திவாகரன்தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பும் நினைக்கிறதாம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், நமக்கு இந்த பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.. சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த்.. இவருக்கு நேற்று 16-ந்தேதி பிறந்தநாள்!

தினகரன்: இதையொட்டி சசிகலா உறவினர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள்.. ஆனால், தன்னுடைய மாமா, டி.டி.வி. தினகரன் ஃபோன் பண்ணி வாழ்த்துவார் என எதிர்பார்த்திருந்தாராம் ஜெய் ஆனந்த். எனினும், கடைசிவரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லையாம் தினகரன். அது மட்டுமல்லாமல், ஜெய் ஆனந்து ஃபோன் பண்ணியபோதும் தினகரன், அட்டெண்ட் பண்ணவில்லையாம். இதனால், பிறந்த நாளின் போது வழக்கமான உற்சாகமில்லாமல் மூட் அவுட்டாக இருந்தாராம் ஜெய் ஆனந்த் !

இது குறித்து நாம் விசாரித்தபோது, "தனது மகன் ஜெய் ஆனந்துக்கு தினகரனின் மகளை கேட்டிருந்தார் திவாகர். ஆனால் மகளை கொடுக்க மறுத்துவிட்டார் தினகரன்.. இதிலிருந்தே இவர்களின் குடும்பத்துக்குமிடையே சற்று விரிசல் உருவாகியிருந்தது.

வாழ்த்து: இது தவிர, தினகரனை சசிகலா மதிக்காமல் இருப்பதற்கு திவாகர் தான் காரணம் என தினகரன் வலுவாக நினைக்கிறார். அந்த கோபம் இப்போது வரை தினகரனுக்கு போகவேயில்லை.. அதனால்தான், பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லாமல் இருந்திருப்பார் " என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் மன்னார்குடி தரப்பினர்.

ஆனால், இதுவரை சசிகலா ஏன் தினகரனிடம் பாராமுகத்துடன் இருக்கிறார்? உண்மையிலேயே திவாகரன்தான் காரணமா? என்பதற்கு சரியான விடையே கிடைக்கவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ்ஸையும் சசிகலா ஏன் இதுவரை சந்திக்காமல் இருக்கிறார் என்பதற்கும் சரியான விடையே கிடைக்கவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+