அதென்ன சஸ்பென்ஸ்? போற போக்கில் குண்டை தூக்கி வீசிய பிரேமலதா.. மண்டை காய்ந்த அதிமுக.. என்னனு தெரியலயே
சென்னை: அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.. ஆனாலும் ஒரு சஸ்பென்ஸை இன்று வைத்திருக்கிறது.. அது என்னவா இருக்கும்???
சமீபத்தில் நடந்த தேமுதிகவின் செயற்குழு கூட்டத்தில் 14 + 1 சீட் யார் தருகிறார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று குண்டை தூக்கி போட்டிருந்தார் பிரமலதா விஜயகாந்த்.

தேமுதிக: இதே சீட் எண்ணிக்கையில்தான், கடந்த 2014-லிலும் தேமுதிக போட்டியிட்டது என்றாலும், அப்போதிருந்த கட்சியின் பலம் இப்போது இல்லை... அப்போதிருந்த கட்சியின் ஸ்திரத்தன்மை இப்போது இல்லை.. முக்கியமாக விஜயகாந்த் இப்போது இர்லலை.
எனினும், தேமுதிகவுக்கு இவ்வளவு ஆசை கூடாது.. கட்சியின் வலிமைக்கு ஏற்றாற்போல் தொகுதிகளை கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்தன.. நிர்வாகிகளின் ஆசையைத்தான் பேசினேன் என்று பிரேமலதா பின்வாங்கினாலும், எந்த அடிப்படையில் ராஜ்ய சபா சீட் கேட்கிறீர்கள் என்று அதிமுகவும் கேள்வி கேட்டது.. பாஜகவும் கேள்வி கேட்டது.
கூட்டணி: ஆயினும், தேமுதிகவை இரு கட்சிகளுமே தங்கள் பக்கம் இழுத்து வந்தன.. விஜயகாந்துக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டதை பிரேமலதா வரவேற்பார் என்று பாஜக நிறையவே எதிர்பார்த்தது.. ஆனால், "காலம் கடந்து அறிவிப்பு எனக்கு வருத்தம்தான்" என்று ஒரே போடாக போட்டார். அத்துடன், பாஜக முன்வைத்த அனைத்து அழைப்புகளையும் பிரேமலதா நிராகரித்துவிட்டதாக தகவல்களும் கசிந்தன.
மற்றொருபக்கம், பலகட்ட பேச்சுவார்த்தைகள் அதிமுக தரப்பிலும் நடத்தப்பட்டு வந்தது.. ராஜ்ய சபா சீட் விஷயத்தில் தேமுதிக பிடிவாதமாக இருந்தாலும், வடமாவட்ட தொகுதிகளை பெற்றே ஆக வேண்டும் என்பதிலும் தொடர் பிடிவாதம் காட்டியது. அதுவும், பாமக கேட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றையே தேமுதிகவும் கேட்டதால், அதிமுகவுக்கு மண்டை காய்ந்துவிட்டது. எனவே, பேச்சுவார்த்தையில் இழுபறியும் நீடித்தது..
இழுபறி: இந்நிலையில், திடுதிப்பென்று ஒருத்தருமே எதிர்பாராமல், தேர்தல் தேதி அறிவிக்கப்படவும், மொத்த அரசியல் கட்சிகளும் ஆடிப்போய்விட்டன. இத்தனை குறுகிய காலத்தில் தேர்தல் என்றதுமே, மறுபடியும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்தன. கடந்த நாட்களில் அனைத்து கட்சிகளிலுமே கூட்டணி + சீட் விவகாரங்கள் முடிவுக்கு வந்துள்ளன.. அந்தவகையில் தேமுதிகவுக்கு 5 சீட்களை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது.
அந்தவகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு நேற்று கையெழுத்தானது.. திருவள்ளூர்( தனி) , மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "அதிமுகவுடன் கூட்டணி என்பது ஒரு ராசியான கூட்டணி. 2026-ம் ஆண்டிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். 2011-ம் ஆண்டு உருவான வெற்றிக் கூட்டணி போல், இப்போது மறுபடியும் வெற்றிக் கூட்டணி உருவாக்கியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள், "தேமுதிகவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது நிறைய எதிர்பார்த்தீர்கள்.. ஆனால், இப்போது வெறும் 5 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதே" என்று கேட்டார்கள்.
எண்ணிக்கை: அதற்கு பிரேமலதா, "எண்ணிக்கை முக்கியமல்ல. யார், யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாளை எடப்பாடி அண்ணனும், அதிமுக மூத்த தலைவர்களும் தேமுதிக அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது ஒரு நல்ல செய்தி தேமுதிக தலைமை அறிவிக்கப்படும்.. தேமுதிக அலுவலகத்தில் நாளை அந்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்" என்றார்.
கூட்டணியில் சேர்ந்த கையோடு, திடுதிப்பென்று இப்படி ஒரு சஸ்பென்ஸை பிரேமலதா வைத்திருப்பதால், அந்த நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்று தேமுதிக + அதிமுக தொண்டர்கள் குழம்பிப்போய் கிடக்கிறார்கள்.. அது என்னவா இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications