ஆரம்பமே அதிரடி.. "2 தொகுதி".. நல்லபடியா முடிச்சிட்டு வாங்க.. ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட்.. கவனித்த பாஜக
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வரும் நிலையில், பரபரப்பு தகவல்களும் ஓயாமல் வட்டமிட்டு வருகின்றன.
திருநெல்வேலி தொகுதியை குறிவைத்தே, கடந்த ஒரு வருடமாக தீயாய் வேலை பார்த்து வந்திருக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்.. நெல்லையை தனக்கு ஒதுக்குமாறு சரத்குமார் கேட்டாராம். ஆனால், நயினார் விடவில்லை என்கிறார்கள்.. நெல்லையை பாஜக இளைஞர்களுக்கு ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் நயினார் விடவில்லையாம்.

நெல்லை பாஜக: அந்த அளவுக்கு கறாராக இருந்து, நெல்லையை கேட்டு பெற்றிருக்கிறார் நயினார். பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிக்கை வெளியிடப்பட்டு, பிறகு அது மாற்றப்பட்டு, ஆரம்பமே குழப்பமாகிவிட்டது.
இதற்கு அடுத்தபடியாக, கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டது..
நயினார் நாகேந்திரன்: ஒருபக்கம் வருமானவரித்துறை + மறுபக்கம் தாம்பரம் போலீசார் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.. இப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மனும் அனுப்பியிருக்கிறார்கள்.
இதுபோக, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக ஹைகோர்ட் சொல்லியிருக்கிறது... கோர்ட் உத்தரவு எப்படி வரப்போகிறதோ தெரியவில்லை..
நெருக்கடிகள்: ஆனால், நெல்லையில் பாஜக வேட்பாளருக்கு எழுந்திருக்கும் இதுபோன்ற நெருக்கடிகளே, திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது எனகிறார்கள்.
நெல்லை திமுக கூட்டணியிலும், ஆரம்பத்தில் குழப்பம் இருக்கவே செய்தது.. இந்தியா கூட்டணியில் இந்த முறை தேனியை திமுக எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு நெல்லையை ஒதுக்கியது.. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல் முதல்வர் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு வரை அறிவிக்கப்படாமலேயே இருந்தது. அதற்குபிறகுதான், பிரச்சாரங்கள் சூடுபிடித்தன.
வாக்கு வங்கி: நெல்லை தொகுதியில், முக்குலத்தோர், நாடார், முஸ்லீம், கிறிஸ்தவர்கள், பட்டியல் சமுகத்தினரை வசித்து வரும்நிலையில், வேட்பாளரின் சமூகம், மதம் சார்ந்தே, குறிப்பிட்ட அளவு வாக்குகள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு திடீர் சலசலப்பை உண்டுபண்ணிவிட்டது."திமுக கூட்டணி எல்லா இடத்திலும் வெற்றி பெற்றுவிடும்.. ஆனால் நெல்லை மட்டும் கொஞ்சம் சந்தேகம்.. காரணம், வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸுக்கு அனுபவம் போதாது.. நான் நாளைக்கு நெல்லை போகிறேன், ஒன்னும் பிரச்சனையில்லை, சமாளித்து விடலாம்" என்று பேசியிருந்தது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கே அதிர்ச்சியை தந்துவிட்டது.
அமைச்சர் பொறுப்பு: இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, நெல்லைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தவர் தங்கம் தென்னரசு... ஆனால், நெல்லை திமுகவை என்னால் சமாளிக்க முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலினிடம் தங்கம் தென்னரசு ஓபனாகவே சொல்லிவிட்டார்.
எனவே, நெல்லையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 2 வாரங்களுக்கு முன்பு ஒப்படைத்திருந்தார் ஸ்டாலின். ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பும் அனிதாவிடம்தான் இருக்கிறது.. இப்போது கூடுதல் பொறுப்பாக நெல்லை தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது..
தொகுதி நிலவரம்: நேற்றிரவு தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களை யும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தை விசாரித்திருக்கிறார். இதற்கு முன்பாக தமிழக உளவுத்துறையிடமிருந்து ஒரு ரிப்போர்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் ஆலோசித்துள்ளார் ஸ்டாலின்.
அந்தவகையில், அனிதாவிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.. "ரெண்டு தொகுதிகளையும் ஜெயித்து விட்டு வாருங்கள், மற்றவர்களை காட்டிலும் உங்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று கிடைக்கும்" என பூஸ்ட் கொடுத்துள்ளாராம் ஸ்டாலின்.
சர்ப்ரைஸ்: எப்போதுமே சிறப்பாகவும், ஸ்மார்ட்டாகவும் செயல்படும் அமைச்சர்களை தட்டிக்கொடுத்து, சர்ப்ரைஸ் பரிசு தருவது ஸ்டாலினின் வழக்கம்.. இந்த பரிசினை ஸ்டாலினிடமிருந்து அதிகமுறை பெற்றவர், செந்தில் பாலாஜியாகத்தான் இருக்க முடியும்..
"கட்டி வா என்றால், வெட்டி கொண்டுவந்துவிடுகிறார் செந்தில் பாலாஜி" என்று ஸ்டாலினே பலமுறை நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.. இப்போது, அந்த சான்ஸ் அனிதாவுக்கு செல்ல போகிறதா? என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க











Click it and Unblock the Notifications