சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கொரோனா அதிகரிப்பது அச்சமாக உள்ளது.." பரபரக்கும் அமைச்சர் மா.சு! கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுமா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா அதிகரிப்பது அச்சமாக உள்ளது.. பரபரக்கும் அமைச்சர் மா.சு!

    கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா ஏற்பட்ட நிலையில், அது விரைவாகக் கட்டுக்குள் வந்தது.

    அதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா..1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா..1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

     தடுப்பூசி முகாம்

    தடுப்பூசி முகாம்

    வேக்சின் மட்டுமே கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனுக்கு எதிரான ஒரே பேராயுதமாக பார்க்கப்படுகிறது. வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே கொரோனா உயிரிழப்புகள் கட்டுக்குள் வந்தது. தமிழக அரசும் வேக்சின் பணிகளை அதிதீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கொரோனா வேக்சின் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு, வேக்சின் செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

     மா. சுப்பிரமணியன்

    மா. சுப்பிரமணியன்

    இப்போது வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வேக்சின் பணிகள் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இன்று மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த மெகா வேக்சின் முகாமை தொடங்கி வைத்தார்.

     அச்சமாக உள்ளது

    அச்சமாக உள்ளது

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சற்று கொரோனா அதிகரித்து வருவது அச்சமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 2019ல் இருந்து 2022 வரை நாம் கடந்து வந்துள்ளோம்..

     பள்ளிகள் திறப்பு

    பள்ளிகள் திறப்பு

    இப்போது வைரஸ் பாதிப்பு தொடங்கி அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. இப்போது நம்மிடம் 98 லட்சம் வேக்சின் குப்பிகள் கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இப்போது மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும். பள்ளி திறப்பிற்காகக் கூடுதல் கட்டுப்பாடுகள் இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித் துறையையும் இதில் கவனமாகச் செயல்பட்டு வருகின்றது" என்றார்.

     கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தாலும் கூட கொரோனா டெஸ்டிங் செய்யப்படுவோரில் வெறும் 2% பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா பரவல் குறைவாகவே உள்ளதால் தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

     வேக்சின் முகாம்

    வேக்சின் முகாம்

    சில மாத இடைவெளிக்குப் பின்னர் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மாநிலத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் டோஸ் செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வேக்சின்கள் போடப்பட்டு வருகிறது.

    English summary
    Tamilnadu Health minister Ma.Subramanian explains about Coronavirus cases in Tamilnadu: (தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ்) Ma.Subramanian explains about additional restrictions in state, amid rise of Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X