Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முருங்கைக்கீரை" அதிசயம்.. உங்க ஆயுளை நீட்டும் ரகசியம்.. "இதை" மட்டும் செய்யுங்க.. இயற்கை பொக்கிஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.

சாறுகள்: இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும்.
முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..

முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.

health news and Do you know what are the health benefits of drumstick tree

இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன..

எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன.
ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.

வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்... முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.

தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை.. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்... தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்..

முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.

உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை.. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள்.

இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள்.

இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க

பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+