3 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை.. தமிழ்நாட்டில் வாட்டும் வெயில்.. எங்கெங்கு தெரியுமா?
நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வெப்ப அலை ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.
நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது.கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.

வெப்ப காற்று
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை
அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்டில் கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இங்கே 37 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு வெப்பநிலை
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலை
நாடு முழுக்க பல்வேறு நாடுகளில் வெப்ப அலை ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை இதனால் தீவிரமாக அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. ஆனாலும் கூட இங்கே வெப்பநிலை அதிகரித்து உள்ளது. முதல் கட்டமாக மும்பையில் வெப்ப அலை வீசும். அதன்பின் கோவாவில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இன்று வெயில்
தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் அடிக்கும். இன்னொரு பக்கம் வடக்கு தமிழகம் போலவே மத்திய தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். திருத்தணியில் வெயில் வாட்டி எடுக்கும். ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் வேலூரில் மிக அதிகமாக வெயில் இருக்கும். சென்னையில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications