சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழை.. 16 ஏரிகளுக்கும் நீர்வரத்து உயர்ந்தது.. தற்போது என்ன நிலை?

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விடிய,விடிய கொட்டி தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

    சென்னை; சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் பல ஏரிகளில் நீர் பாதி அளவு நிரம்பி காணப்படுகிறது.

    சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி இருக்கிறது. பல பகுதிகள் இதனால் வெள்ளக்காடாக மாறியது.

    ஏரிகள் எப்படி

    ஏரிகள் எப்படி

    மழை காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. தற்போது செயல்படும் நிலையில் சென்னையில் 16 ஏரிகள் இருக்கின்றன. சென்னையின் தாம்பரம் பகுதிகளில் பெய்த கடுமையான மழையால் அங்கு உள்ள ஏரிகள் நிரம்பி இருக்கிறது.

    முக்கால்வாசி நிரம்பியது

    முக்கால்வாசி நிரம்பியது

    அங்கு இருக்கும் செம்பாக்கம் ஏரி முக்கால்வாசி நிரம்பி உள்ளது. அந்த ஏரிக்கு பக்கத்தில் வீடு கட்டியவர்களின் வீடுகளுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகம் வந்தால் இவர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியும் நிரம்பி இருக்கிறது. இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவையும் தாண்ட வாய்ப்புள்ளது. இதேபோல பீர்க்கன்காரணை ஏரியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் நிரம்பி செல்கிறது.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னையின் முக்கியமான ஏரிகளான புழல் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சென்னையின் நீர் தேவை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+