சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் கனமழை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழையை கொடுக்காத நிலையில் மீண்டும், தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவ காற்று காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மாலையில் இருந்து பெய்ய தொடங்கிய மழை விடாமல் கொட்டியது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் , கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இது போக டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சாரல் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அதேபோல் வடமாவட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னையில் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications