குமரி, திருநெல்வேலி தேனி, உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படவில்லை.

தென்மேற்கு பருவ மழை கடந்த சனிக்கிழமை கேரளாவில் தொடங்கியது. இந்த பருவ மழை துவங்கிய பின் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்தவிதமான மழையும் இதுவரை கிடைக்கவில்லை. வெப்பச்சலனம் காரணமாகவே இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கன்னியாகுமரி, கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

கோவை, குமரியில் மழை

கோவை, குமரியில் மழை

இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழத்தில் எங்கெல்லாம் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்ப என்பது குறித்து தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மேகமூட்டம்

சென்னை மேகமூட்டம்

மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கைவிடப்படவில்லை. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீசும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

வானிலை மையம்

வானிலை மையம்

சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை

புதன்கிழமை காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ, கூடலூரில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செ.மீ. கோவை சின்னக்கல்லாறில் 4.செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 4செ.மீ மழை பெய்துள்ளது. நாகர்கோவில், நடுவட்டம்(நீலகிரி), குளச்சல், முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதி உள்பட பலவேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+