சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்போது முடியாது.. இன்னும் 6 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Recommended Video

    சென்னை: அடுத்த 6 மணி நேரம்… சென்னைக்கு முக்கியம்.. கன மழை அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்..!

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி முதலே மழை பெய்து வருகிறது இது காலை 10 மணி வரை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    விடாது மழை பெய்யும்... சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்ட மக்களே குஷியா இருங்க விடாது மழை பெய்யும்... சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்ட மக்களே குஷியா இருங்க

    சென்னை

    சென்னை

    இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது காலை 10 மணி வரை தொடரும்.

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை

    அது போல் வேலூர், ராணிப்பேட்டை, புதுவை, திருவண்ணாமலை, காரைக்காலிலும் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் பணிக்கு செல்வோர் கடும் அவதிப்படுகிறார்கள். ஆங்காங்கே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    6 மணி நேரம்

    6 மணி நேரம்

    ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆதம்பாக்கம், கே கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

    சாலையில் வாகன ஓட்டிகள்

    சாலையில் வாகன ஓட்டிகள்

    சென்னையின் பல்வேறு இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள். சைதாப்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. அதிகாலை முதல் பெய்த மழைக்கே தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்னும் 6 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தால் என்னவாகும் என மக்கள் வேதனையில் உள்ளார்கள்.

    English summary
    Chennai Meteorological Department says that Chennai will get rainfall upto 10 am.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X