"வடியல, முடியல".. பள்ளிக்கரணை டூ முடிச்சூர் மேல பாருங்க.. ஹெலிகாப்டரில் வந்த ராணுவம்.. மீளுமா சென்னை
சென்னை: இந்திய ராணுவத்தினர் சென்னை மக்களுக்கு உணவு பொட்டலங்களை, ஹெலிகாப்டர்களில் இருந்து விநியோகித்து வருகிறார்கள்.
மிக்ஜாம் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநகரம்.. அதிலும், சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவேயில்லை.. மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது தாம்பரம், பல்லாவரம் தொகுதிகள்.. இங்குள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கிவிட்டன.. அதேபோல, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், புழுதிவாக்கம், அரும்பாக்கம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பாதிப்புகள்: மழை ஓய்ந்தபோதும் தண்ணீர் நிறைய இடங்களில் வடியாமல் உள்ளது.. இதனால், உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. பல இடங்களில் இன்னும் கரண்ட் வரவில்லை.. செல்போன் சேவை கிடைக்கவில்லை. அதனால், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, தாம்பரம் பகுதிகளில் மழையால் பாதித்த சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஏராளமான சமூக ஆர்வலர்கள், பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவுகளை செய்து வருகிறார்கள். தாம்பரத்தில் பல தெருக்களில் நீர் நிறைந்து கிடப்பதால், படகு போக்குவரத்துதான் நடக்கிறது.
தாம்பரம்: தாம்பரத்தை போலவே, வேளச்சேரி பகுதியிலும், வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்களால் வெளியே வர முடியவில்லை.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், உட்புற பகுதிகளில் வசிப்பவர்கள் இன்னமும் சிக்கி தவித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்ததையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
முடிச்சூர் பகுதி மக்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டது.. வாட்டர் பாட்டில், உணவு, பால் பாக்கெட், பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் படகு மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்திய ராணுவம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முடிச்சூர்: 2 ஹெலிகாப்டர்களின் மூலமாக ராணுவ அதிகாரிகள், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.
முடிச்சூர் ஏரி நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால், குடியிருப்பு பகுதிகளையும் அது சூழ்ந்துள்ளது. முடிச்சூர் ஏரியை, அடிக்கடி தூர் வாரியிருந்தாலே, இப்படி தண்ணீர் தேங்காது என்று புலம்புகிறார்கள் அந்த பகுதி மக்கள்..
மேற்கு தாம்பரம்: மேற்கு தாம்பரம், தரமணி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது.. இதில் துரைப்பாக்கம் பகுதியில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் படகுகள் மூலம், மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.. செல்போன் தொடர்பு முடங்கியுள்ளதால், ஒருசிலரை தொடர்புகொள்ள முடியாமல் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளிலிருந்து வெளியேறிய உபரிநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. எனவே, அந்த பகுதி மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். இதைகேள்விப்பட்டு, பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், மாநகராட்சி அதிகாரிகள் படகுமூலமாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீட்புகுழு: இப்போதைக்கு புயல் மற்றும் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 5 குழுவினர் சென்னை வந்துள்ள நிலையில், இதில், 2 குழுக்கள் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற 3 குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications