"ஆபத்தின் பிடியில் கிழக்கு கடற்கரை".. பரபரத்த மனு! மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: சுற்றுச்சூழல் மாறுபாட்டால் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தின் கிழக்கு கடற்கரை கிராமங்களை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி உலகுக்கு செய்யும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைகளும், ரசாயனங்களும் உலகை வெப்பமயமாதலை நோக்கி தள்ளியுள்ளன.
இவ்வாறு உலகம் வெப்பமயமாவதால் பருவநிலை மாறுபாடு (Climate change) அதிகரித்து, பூமியின் இயற்கை சமநிலையையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

ஆபத்தின் விளிம்பில் தமிழகம்..
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் பூமியில் உள்ள கடல் நீர் மட்டத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இதனால் உலகுக்கு பேரழிவு ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அதன் முதல்கட்டமாக, தற்போது உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகள் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளும் இதிலிருந்து தப்பவில்லை. கடல் மட்டம் உயர்வால் அடிக்கடி தமிழகத்தில் கடல் நீர் உள்வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமங்கள் அழிம்பின் விளிம்பில் உள்ளன. இதனால்தான் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழகத்தில் பல கடற்கரையோர கிராமங்கள் கடலில் மூழ்கிவிடும் என அண்மயைில் வெளியான ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டன.

பேராபத்தில் கடற்கரைகள்..
நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 'மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கம்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "கடலில் சமீபகாலமாக உருவாகும் பேரலைகள், கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது.

கிழக்கு கடற்கரையை பாதுகாக்க கோரி..
தமிழகத்தில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

உத்தரவு..
இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பின்னர், இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications