Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவலர்கள் மீது தனிநபர் வழக்கு தொடர தமிழக அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை.. ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல் துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர தமிழக அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையாகும். ஐஏஏஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கட்டாயம் தேவையாகும். அதேநேரம் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல் துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர தமிழக அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என்ற நிலை தான் இப்போதும் இருக்கிறது.

police High Court

இதனால் காவல்துறையில் காவலர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியாற்றி வருபவர்களுக்கு எதிராக அந்தந்த பகுதி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் தனிநபர்களால் வழக்கு போடப்பட்டிருக்கின்றன. அப்படி நிலுவையில் உள்ள தனிநபர் வழக்கை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். அப்போது அவர் கூறும் போது, இந்த விவகாரத்தில் இருவேறு விதமான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதில் எந்த உத்தரவை பின்பற்றுவது என்பது கடினமானது. எனவே எந்த முடிவை இறுதியானது என்று எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முடிவு எடுப்பதுதான் சரியானது. எனவே இந்த மனுக்களை இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றும்படி உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களை நியமன அதிகாரிதான் பணி நீக்கம் செய்ய முடியும். அதன்படி போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை போலீஸ் ஐ.ஜி. போன்ற அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள்தான் நியமிக்கிறார்கள். போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளை அரசு நியமிக்கிறது. எனவே போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியில் இருப்பவர்களை நீக்கம் செய்யக்கோரி தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் காந்தி, அருள்வடிவேல்சேகர் ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், குற்றவியல் நடைமுறை சட்டம் 197-ன்படி தனி நபர் வழக்கு தாக்கல் செய்ய அரசின் முறையான ஒப்புதல் பெற வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பணியாளர் என பாகுபாடு பார்க்க முடியாது. எனவே தனி நபர் வழக்கு தொடர முறையாக அனுமதி பெறுவது அவசியம் என வாதிட்டார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறுகையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவரால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கும்போது போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 197 பொருந்தாது.

இதை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. எனவே அரசு நடவடிக்கை எடுக்கக்கூடிய பணி நிலையில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர மட்டும் தான் அனுமதி பெற வேண்டும் என்பது பொருந்தும். எனவே போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான காவல்துறையினர் மீது தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி பெற தேவையில்லை" இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+