9 ஆண்டுகளுக்கு பிறகு.. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டில் மனு
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் மீதான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவரது மகன், பிரவீன் கோவை தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் சென்ற கார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கியதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல் (இந்திய தண்டனை சட்டம் 304(A) பிரிவின் கீழ் பிரவீன்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை அவிநாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிரான பிரவீனின் மேல்முறையீடு திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரவீனின் அரசியல் பின்புலத்தால் விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது எனக் கூறி புகழேந்தி தரப்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்பு அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து












Click it and Unblock the Notifications