Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் காத்த கோவில்கள்.. இப்போ கோவில்களுக்கே பெரிய ஆபத்து! அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆலயங்களை பாதுகாக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை தவறுவதாகவும், இயற்கை சீற்றங்களால் கோவில்களில் ஏற்படும் பாதிப்புகளை அறநிலையத்துறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பாரத நாட்டிலேயே அதிகமான கோவில்களை கொண்டுள்ளது தமிழகம் தான். சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நமது பாரம்பரியத்தை நிலைநாட்டவும், ஆயிரக்கணக்கான கோவில்கள் நமது முன்னோர்களால் கட்டப்பட்டது.

chennai hindu munnani kadeswara subramaniam

ஆனால் தற்போது கோவில்களை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை இயற்கை சீற்றங்களால் கோவிலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்கூட்டியே திட்டங்களை வகுத்து கோவில்களை பாதுகாக்கத் தவறுகிறது.

சென்ற வாரம் பெய்த கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால்,பக்தர்கள் மழை நீருக்குள் நின்றே தரிசனம் செய்யும் அவலநிலை உள்ளது..அதேபோல விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஸ்ரீஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசாயி கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சங்கிலித் தொடர் போல தஞ்சாவூர் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்த மழைநீர் கருவறை வரை தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது ஏதோ ஒரு சில மாவட்டங்கள் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோவில்களின் நிலைமை அவலநிலையாகவே உள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நமது அரசர்களும், முன்னோர்களும் திட்டமிட்டு எப்படிப்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கோவில்கள் பாதிக்கப்படாதவாறு முன்னேற்பாடுகளை செய்து வைத்தனர்.

தற்போது தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. கோவில்களை சுற்றியுள்ள பல குளங்கள் இன்று காணாமல் போனதற்கும்,அறநிலையத்துறையின் நிர்வாகச் சீர்கேடே காரணம்.மழைநீர் தேங்குவதால் பழமையான கோவில்களின் சுவர்கள் அரிக்கப்படுகிறது.

மேலும் கோவில்களை சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகளை உயரப்படுத்தி அமைத்து விடுகின்றனர். ஆகவே கோவில் கீழே சென்று விடுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடிவதில்லை.கோயில்கள் சாலையைவிட கீழே சென்று விடுவதால் சிதம்பரம் ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களின் சிற்ப வேலைப்பாடுகள் கூட மறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்கள் பள்ளத்திற்குள் சென்று விடுவதால் மழை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது.

தேங்கிய மழை நீரை வெளியேற்ற தமிழக அரசு, சுற்று வேலிகள் அமைத்தல், மழைநீர் தனியாக செல்ல குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை. தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மழைநீர் கோவிலுக்குள் வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும். ஆனால் பக்தர்களின் உண்டியல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் அறநிலையத்துறைக்கு இதைப் பற்றி யோசிக்க நேரமில்லை என்றே தோன்றுகிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின் கம்பிகளில் சிக்கி கோவில் தேர் பாதிப்புக்கு உள்ளானது. தொடர் மழை பெய்து வருகிறது என்று தெரிந்தும் கூட தேவையான முன்னேற்பாடுகளை அறநிலையத்துறை செய்யவில்லை. இது அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இப்படித் தொடர்ந்து கோவில்களின் விஷயத்தில் அலட்சியப் போக்கை காட்டும் அரசும், அறநிலையத்துறையும் இயற்கை சீற்றங்களில் இருந்து கோவில்களைப் பாதுகாக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தின் அனைத்து கோவில்களையும், இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+