இந்துக்களுக்கும் ஓட்டு உள்ளது.. திமுகவுக்கு நியாபகம் இருக்கட்டும்.. கொதித்த நிர்மலா சீதாராமன்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்துவை திட்டுவதில் முன்னணியில் இருக்கிறாரே தவிர, இந்துவும் அவரது வாக்காளர்கள் என்பதை மறந்துவிட்டார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் கூறினார்.
தமிழ்நாட்டில் நாளை கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள், அன்னதானம் வழங்க, பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பிலோ இதுபற்றி திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பூஜைகள் செய்யவோ, அன்னதானம் - பிரசாதம் வழங்கவோ எந்த தடையுமே விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன் பேட்டி: ஆனாலும் இது தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. அந்த வகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், சேலத்தில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்பவே திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சேகர்பாபுவின் இந்த விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மிரட்டுகிறார்கள்: வதந்தியை பரப்ப வேண்டாம் என்று எனக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். வதந்தி என்றால் ஏன் உடனடியாக பதில் கொடுக்கவில்லை சேகர் பாபு. பத்திரிகையில் போட்டது தவறு.. நான் அந்த மாதிரி உத்தரவே கொடுக்கவில்லை. என்று மக்களுக்கு சொல்லுங்கள்.. நீங்கள் கோவில் போய் இதை கொண்டாட வேண்டும் என்று விரும்பினால் தாராளமாக கொண்டாடுங்கள்.. எந்த வித தடுப்பும் இல்லை என்று சொல்லனுமா வேண்டாமா..
அங்கே இப்போதும் போலீஸ் நிற்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை இந்து மக்களுடைய அவுங்க பூஜா வழிபாட்டில் கலந்துகொண்டு உதவியாக இருக்கனுமா.. இல்லை எதிர்மறையாக இருக்க வேண்டுமா.. அறநிலையத்தூறை அமைச்சர் இந்துக்களுக்கு ஏதுவா அவுங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு மறுத்தற்கு கடிதம் எங்கே என்று கேட்க கூடாது. ஆனால் போலீசை வைத்து எல்இடி கொடுப்பவர்களை சில இடங்களில் மிரட்டுகிறார்கள்.
கடிதம் எங்கே என கேட்கிறார்கள்: அயோத்தி விழாவை பார்க்க வேண்டும் என பணம் செலவு செய்து எல்இடி ஏற்பாடு செய்பவர்களை கூட போலீசாரை கொண்டு செய்ய விடாமல் நிறுத்துகிறார்கள். அதனால சாமர்த்தியமாக நிராகரித்தோம். கடிதம் உங்க கையிலா இருக்கிறது என்று கேட்கும் அமைச்சருக்கு நான் பணிவோடு சொல்ல விரும்புவது இதுதான். ரொம்ப சாமர்த்தியமா போலீசை வைத்து கட்டுப்படுத்திவிட்டு கடிதம் எங்கே என்று கேட்டால்.. சமூக வலைதளங்களிலும் பலரும் இந்த கடிதத்தை போடுகிறார்கள்.
குலசேகரம், குளச்சல், மண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடவில்லை. இந்துக்களுக்கு எதிரி பாஜகதான் என்று உதயநிதி மாநாட்டில் பேசியது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு நான் பதில் சொல்லப்போவது இல்லை. உதயநிதி இந்துக்களுக்கு எதிரானவர். நான் கிறிஸ்தவராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்கிறார். அதில் தவறே இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்.
இந்துவை திட்டுவதில்: ஆனால் உங்க மதத்தை பற்றி பேசிக்கோங்க.. எதிர்மதத்தை பற்றி தப்பா பேசுவது நியாயமா? அதை கேட்க வேண்டுமா இல்லையா?.. இந்துவை திட்டுவதில் முன்னணியில் இருக்கிறாரே தவிர.. இந்துவும் அவரது வாக்காளர்கள் என்பதை மறந்துவிட்டார். நான் ஒரு விஷயத்தை நியாபகப்படுத்திக்கிறேன்.
அவ்வளவு பெரிய அயோத்தி விழா நடக்கும் போது மனதில் வேதனையோட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்க நாத்திகம் பேசிக்கோங்க.. இந்துக்களுக்கு எதிர்ப்பு என பேசிக்கோங்க.. ஆனால் இந்துக்களின் கடவுள் ராமர் மேலே செருப்பு மாலை போட்டு ஊர்வலம் பண்ணின கும்பலிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications