5 மாநில தேர்தல் சர்வே.. திமுகவிற்கு போன திடுக் மெசேஜ்.. உடனே சுதாரிக்கணும்.. இதுதான் மெயின் மேட்டர்!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த கணிப்புகள் ஒரு வகையில் திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பில் எந்த கட்சி எந்த மாநிலங்களை வெல்லும், எங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது.

மொத்த கணிப்பு; மொத்த கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் , தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 5 மாநிலங்களில் 1ல் ஏற்கனவே ஆட்சியில் இருந்ததை.. ராஜஸ்தானில் காங்கிரஸ் இழக்க உள்ளது. அதே சமயம் தெலுங்கானாவில் ஆட்சியை பெற உள்ளது.
காங்கிரஸ் பின்னடைவு; இந்த தேர்தல் கிட்டத்தட்ட அரையிறுதி தேர்தல் போல பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
மக்கள் மனநிலை: காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை வடஇந்தியாவில் தொடர்ந்து உள்ளது இந்த கணிப்பு மூலம் தெரிகிறது. 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர் தவிர வேறு எங்கும் காங்கிரஸ் ஆதரவு மனநிலை வடஇந்தியாவில் இல்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் வலிமை அடைந்து வருகிறது. முக்கியமாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் தற்போது தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக வலுவான பிஆர்எஸ் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை இது காட்டுகிறது.
திமுகவிற்கு போன செய்தி; இது திமுகவிற்கு போன முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு பெருகுகிறது.. வடக்கில் காங்கிரஸ் ஆதரவு சரிகிறது என்பதை திமுக உணரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு உயர்வதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.
லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. திமுகவிடம் 15 இடங்களை காங்கிரஸ் கேட்கும் திட்டத்தில் உள்ளதாம். தெலுங்கானா வெற்றி காங்கிரஸ் உத்வேகத்தை அதிகரித்து கூடுதல் இடங்களை கண்டிப்பாக திமுகவிடம் லோக்சபா தேர்தலில் கேட்க வைக்கும்.
ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது என்கிறார்கள் விவரம் றிந்தவர்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அதுவும் தெலுங்கானா வெற்றி காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதால் திமுக சுதாரிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications