செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வருவது தெரியாதா? ஜப்பானில் அதிகாரிகளை கடிந்த ஸ்டாலின்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வருவது தெரியாதா? ஜப்பானில் அதிகாரிகளை கடிந்த ஸ்டாலின்! என்ன நடந்தது

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டில் இருக்கும் இந்த தருணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிரடி சோதனையை நடத்தி வருகிறது வருமானவரித்துறை. இந்த ரெய்டு தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்களை நம்மிடம் வழங்கினர்.

How did CM Stalin get to know about the Income tax department raid at Minister Senthil Balajis premises?

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான பிளானுடன் எங்கும் தகவல் கசியாமல் வருமான வரித்துறை இந்த ரெய்டை நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி நெருக்கமாக பழகும் எல்லோரும் ரெய்டில் சிக்கி உள்ளனர்.சென்னை, கரூர், கோவையில் இந்த ரெய்டு அதிக அளவில் ரெய்டு நடத்தி வருகின்றனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

திமுக ரெஸ்பான்ஸ் என்ன? : செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் ரெய்டு அவரை பிடிக்காத "சில" தமிழ்நாடு அமைச்சர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்கு பதிலாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். மூத்த அமைச்சர்கள் இருவர், " 2000 ரூபாய் திரும்பபெற்றதற்கு பிறகு அக்டோபரில் தான் ரெய்டு நடத்துவார்கள்னு நினைச்சோம். ஆனா, கணக்கில் காட்டப்படாத 2000 நோட்டுகளெல்லாம் டாஸ்மாக் மூலம் செந்தில்பாலாஜி 500 ரூபாயாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

செப்டம்பருக்குள் தங்களிடமுள்ள அனைத்து 2000 ரூபாயையும் மாற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு மாற்ற முயற்சித்து வருவதை மோப்பம் பிடித்து விட்டதால் இந்த ரெய்டை அவசரம் அவசரமாக நடத்துகிறார்கள். இது இதோடு நின்று விடப்போவதில்லை. அமலாக்கத்துறையில் இதில் குதிப்பார்கள்.

இதெல்லாம் வேண்டும். கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார் ? " என்று பேசிக் கொள்கிறார்களாம். திமுக தரப்பில் பலரிடமும் இதே கமெண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுக தலைமையும், முதல்வரும், மற்ற சில மூத்த அமைச்சர்களும் செந்தில் பாலாஜிக்கு முழு சப்போர்ட் என்றுதான் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரெய்டு நடத்தப்படும் விவசயத்தை ஜப்பானில் உள்ள முதல்வருக்கு அவருக்கு அருகில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் உளவுத்துறையினர் தெரியப்படுத்திய போது, " ரெய்டு நடக்கப் போவதை முன் கூட்டியே உங்களுக்கு தெரியாதா? " என்று கடிந்து கொண்டிருக்கிறார் முதல்வர்.

ரெய்டு எப்போதும் போல நடக்கும், சட்ட ஒழுங்கை பார்த்துக்கொள்ளுங்கள். நிலைமையை கட்டுக்குள் வையுங்கள். ரெய்டு அமைதியாக நடக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாராம்.

இந்த நிலையில், ஜப்பானில் நிகழ்ச்சியில் முதல்வர் பிசியாக இருப்பதால் தமிழகத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடன் ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துள்ளனர். இதனால் உதயநிதிக்கு தகவலை தெரிவித்தபடி இருக்கின்றனர். அவர் மூலமாகவே ஜப்பானுக்கு தகவல் பாஸ் ஆகிக்கொண்டிருக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+