நெருப்பை சுற்றாத திருமணங்கள் செல்லாது! உச்ச நீதிமன்ற தீர்ப்பு.. தமிழ்நாட்டை "காத்த" அண்ணாவின் சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 1967ல் இயற்றப்பட்ட சிறப்பு சட்டம் ஒன்று இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பல்வேறு திருமணங்களை காப்பாற்றி உள்ளது. முக்கியமாக இந்து மதத்தை சேர்ந்தவர்களின் திருமணங்களை இந்த சட்டம் காப்பாற்றி உள்ளது. அப்படி என்ன நடந்தது?

சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இந்து மத திருமணங்கள் தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஒரு இந்து திருமணம் என்றால் அது புனிதமான நெருப்பை சுற்றி வர வேண்டும். அதோடு 7 அடிகளை எடுத்து வைத்து நெருப்பை சுற்ற வேண்டும். இது போக இந்து மதத்தில் உள்ள சம்பிரதாயங்களை செய்யவில்லை என்றால் அந்த திருமணம் செல்லுபடியாகாது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.

How did CN Annadurai decades old law save many Hindu Marriages in Tamil Nadu after SC ruling


சாஸ்திரங்களில் உள்ள அத்தியாவசிய சடங்குகள் செய்யப்படவில்லை என்றால் அது தவறான திருமணம். தம்பதிகள் நெருப்பைச் சுற்றி நடக்கவில்லை, திருமண சம்பிரதாயத்தின் ஏழு படிகளை ஒன்றாக கடக்கவில்லை என்றால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. இப்படிப்பட்ட இந்து திருமணம் பதிவு செய்தாலும் அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்துக்கள் எல்லோரும் இப்படி திருமணம் செய்வது இல்லை . சிலர் சுயமரியாதை திருமணங்களை கூட செய்கின்றனர். இந்துக்களாக அதிகாரபூர்வமாக இருந்தாலும் சுயமரியாதை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இன்னும் சில சாதி பிரிவுகளில் வேறு வேறு மாதிரியான திருமண உறவுகள் உள்ளன.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 1967ல் இயற்றப்பட்ட சிறப்பு சட்டம் ஒன்று இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பல்வேறு திருமணங்களை காப்பாற்றி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டில் இதுவரை இந்த முறையை பின்பற்றாமல் செய்யப்பட்ட திருமணங்களை காப்பாற்றி உள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க வெவ்வேறு சமூகங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த வழியில், சொந்த முறையில் திருமணங்களைக் மேற்கொள்கிறார்கள். பல திருமணங்களில் நெருப்பு இல்லாமலே திருமணம் நடக்கும் நிகழ்வுகள் உள்ளன.

இத்தகைய சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்ட இந்து திருமணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம், இக்கட்டான நிலை தற்போது நாடு முழுக்க ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு இந்த பிரச்சனை இல்லை. இதற்கு காரணம் 1967ல் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும்.

How did CN Annadurai decades old law save many Hindu Marriages in Tamil Nadu after SC ruling

இது தொடர்பாக முன்னாள் நீதிபதி கே சந்த்ரு டைம்ஸ் ஆப் இந்திய ஊடகத்தில் எழுதி உள்ள கட்டுரையில்,

1967ல், காங்கிரசை தோற்கடித்து தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்றபோது, ​​அதன் முதல் முதலமைச்சரான சி என் அண்ணாதுரை, இந்து திருமணச் சட்டத்தில் மாநிலத் திருத்தம் கொண்டு வந்தார். புதிய பிரிவு 7A இன் கீழ், சுயமரியாதைத் திருமணம் அல்லது சீர்திருத்தத் திருமணம் எனப்படும் இரண்டு இந்துக்களுக்கு இடையேயான எந்தத் திருமணமும் எந்த நபரின் முன்னிலையிலும் நிச்சயிக்கப்படலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்.

மேலும் திருமணத்தில் ஈடுபடும் இருவரும் மாலை அணிந்தால் மற்றவரைத் தங்கள் துணையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அல்லது ஒருவருக்கொருவர் மோதிரம் அல்லது தாலி கட்டுவதன் மூலம் அவர்கள் திருமண உறவில் இணைகிறார்கள் என்பது அர்த்தம். எந்த சாஸ்திர சடங்குகளும் அவசியம் கிடையாது. அந்த சடங்குகள் இல்லாமல் திருமணம் மேற்கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட இந்த சட்டம் காரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டில் செல்லாது. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பல்வேறு திருமணங்களை இந்த சட்டம் காப்பாற்றி உள்ளது. முக்கியமாக இந்து மதத்தை சேர்ந்தவர்களின் திருமணங்களை இந்த சட்டம் காப்பாற்றி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+