Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒதுக்குப்புறத்தில்".. அவர் மனைவியும், இவர் கணவனும்.. பிஸி ஜோடி.. டக்குனு வந்த "ஹீரோ".. என்னாச்சு?

கள்ளக்காதல் ஜோடியை குறி வைத்து பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல் ஜோடி ஒன்று, ஒதுக்குப்புறத்தில் படுபிஸியாக இருந்துள்ளது.. அங்கே மாஸ் என்ட்ரி தந்துள்ளா அந்த "போலீஸ்காரர்"..!

Recommended Video

    தனியாக இருக்கும் கள்ளகாதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி நூதன முறையில் கொள்ளை - வீடியோ

    சென்னை கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய காதல் ஜோடிகள் நடமாடுவது வழக்கம்.. அதேபோல, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரத்திலும் ஏகப்பட்ட ஜோடிகள் நடமாடுவார்கள்.

    இதில் நிறைய கள்ளக்காதல் ஜோடிகளும் அடக்கம்.. சாயங்கால நேரமாகிவிட்டால், காதல் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள், இந்த பகுதிகளில் உட்கார்ந்து ஜாலியாக பேசி கொண்டிருப்பார்கள்... சில சமயம் சில்மிஷங்களிலும் ஈடுபடுவார்கள்..

     கள்ளக்காதல் ஜோடி

    கள்ளக்காதல் ஜோடி

    இதைதான் அந்த ஆசாமி கவனித்துள்ளார். தினமும் இந்த ஜோடிகள் இப்படி வந்து உட்காருவதையும், இரவு நேரமானதும் அவரவர் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிடுவதையும் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார்.. இவர்கள் எல்லாம் அவரவர் வீட்டுக்கு தெரியாமல், இங்கு வந்து காதலையும், கள்ளக்காதல்களையும் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட அந்த நபர், இவர்களிடம் பணம் பறிக்க நினைத்தார்.. இதற்காகவே ஒரு பிளானையும் போட்டார்.

     ஆண் நண்பர்கள்

    ஆண் நண்பர்கள்

    அதன்படி, தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று, நான் ஒரு போலீஸ்காரன், கொஞ்சம் என்கூட தனியா வா என்று அந்த ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்து செல்வார்.. இதனால் பயந்துபோன, ஆண் நண்பரும் போலீஸ் என்பதால் பின்னாடியே செல்வார்.. "உன் வீட்டு அட்ரஸ் குடு, உங்க அப்பா பேர் என்ன? எங்கே வேலை பார்க்கிறார், போன் நம்பர் என்ன? என்று மிரட்ட ஆரம்பிப்பார்.. உடனே பயந்துபோன ஆண் நண்பரும், "ஸார், ஸார்.. எங்களை விட்டுடுங்க.. வீட்டுக்கு தெரியாம வந்து பேசறோம்.. தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று கெஞ்ச ஆரம்பிப்பார்..

     பிக்பாக்கெட்

    பிக்பாக்கெட்

    பிறகு போலீஸ்காரர், மெல்ல தன் குரலை தாழ்த்தி, "சரி, உன் அப்பாவிட்ட சொல்லாமல் இருக்கணும்னா, 5 ஆயிரம் கொடு என்று அடுத்த மிரட்டலை துவங்குவார்.. 5 ஆயிரம் கையில் இல்லை சார், இவ்வளவுதான் இருக்கிறது என்று, 2 ஆயிரம், 3 ஆயிரம் என பாக்கெட்டில் உள்ள பணத்தை அந்த ஜோடி கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடும்.. இப்படியே ஏகப்பட்ட பணத்தை வாரிசுருட்டி உள்ளார் அந்த ஆசாமி..

     கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    இதில் யாராவது வாக்குவாதம் செய்தால், அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வேன் என்று மிரட்டியே பணத்தை கறந்துவிடுவாராம்.. கடைசியில் ஒரு காரையே சொந்தமாக வாங்கிவிட்டாராம்.. இப்படி பணத்தை சொகுசாக ருசி பார்த்துவிட்ட ஆசாமிக்கு ஆசை அடங்கவில்லை.. இதைவிட பெரிய அளவு பணத்தை எப்படி பறிப்பது என்று அடுத்தக்கட்டமாக யோசித்தார்.. அப்போதுதான் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு குறி வைத்தார்.. எங்கெல்லாம் ஒதுக்குப்புறம் தென்படுகிறதோ, அங்கெல்லாம் காரில் ரவுண்டு அடித்து கொண்டு தேடுவார்.

     ஜோடி நெருக்கம்

    ஜோடி நெருக்கம்

    எங்காவது கள்ளக்காதல் ஜோடி நெருக்கமாக கண்ணில் பட்டுவிட்டால் போதும்.. அவ்வளவுதான், அதை உடனே செல்போனில் வீடியோ எடுத்து கொள்வார்.. பிறகு, அந்த ஜோடியிடம், "நான் போலீஸ்காரன், ஸ்டேஷனுக்கு வாங்க, விசாரிக்கணும்" என்பார்.. அவர்கள் வர மறுத்தால் வீடியோவை காட்டுவார்.. நகைகளை தந்தால் வீடியோவை இப்பவே உங்க கண்ணு முன்னாடியே டெலிட் செய்வேன் என்பார்.. அவர்களும் பயந்துகொண்டு நகை, பணத்தை தந்து, அங்கிருந்து ஓட்டம் பிடிப்பார்கள்.. இப்படி பல பெண்களின் தாலிகளை இந்த ஆசாமி மிரட்டியே பறித்துள்ளார்.

     முடிச்சூர் சர்வீஸ் ரோடு

    முடிச்சூர் சர்வீஸ் ரோடு

    இப்படிப்பட்ட சூழலில்தான், முடிச்சூர் சர்வீஸ் ரோட்டில், நிறைய பேரிடம் யாரோ ஒருவர் பணம் பறித்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் உளவுத்துறை மூலமாக தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு கிடைத்தது... உடனே அவரை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டதையடுத்து, 7 பேர் கொண்ட டீம் களத்தில் இறங்கினர்.. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.. அதில்தான் கள்ளக்காதல் ஜோடிகளை வீடியோ எடுத்தது முதல் பணம் பறித்தது வரை அந்த ஆசாமி சிக்கினார்... அவர் பெயர் சிவராமன்.. 39 வயதாகிறது.. 10 வருஷமாகவே, செயின் பறிப்பதுதான் பிரதான தொழில். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவராம். கிட்டத்தட்ட 50 சவரன் நகைகளை குறுகிய நாட்களில் பறித்துள்ளாராம். 6 லட்சம் மிரட்டி வாங்கி உள்ளார்.

    ஹைலைட்

    ஹைலைட்

    இதில் ஹைலைட் என்னவென்றால், இப்படித்தான் ஒருமுறை இதே பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு நிஜமான போலீசிடம் சிக்கி, ஜெயிலுக்கு போய், கடந்த ஏப்ரல் 13ம் தேதிதான் வெளியே வந்திருக்கிறார்.. வெளியே வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். இவர் மீது41 திருட்டு கேஸ்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாம்.. இப்படி ஆட்டைய போட்ட நகைகளை தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள மார்வாடி கடையில் விற்று பணம் வாங்கி கொள்வாராம்.. அந்த பணத்தில், பாண்டிச்சேரி, பெங்களூர் என ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுத்து, பெண்களுடன் ஜாலியாக இருப்பாராம்..

     மாமியார்

    மாமியார்

    இவ்வளவும் தெரிந்ததையடுத்து, சிவராமனை பிடிக்க கடலுருக்கு விரைந்தனர்... ஆனால் அவர் அங்கு இல்லை.. பிறகு, அவரது போன் நம்பரை டிரேஸ் செய்தால், பாண்டிச்சேரி காட்டியது.. எனவே அங்கு விரைந்து சென்றால், அங்கும் அவர் இல்லை.. பிறகு பெங்களூரில் இருப்பதாக சிக்னல் காட்டியது.. அங்கு போனால் அங்கும் அவர் இல்லை.. கடைசியில் நன்மங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தாராம்.. அங்குபோய் அவரை சுற்றி வளைத்த போலீஸ், தங்கள் "மாமியார்" வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.. இப்போது களி தின்று கொண்டிருக்கிறாராம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+