வீட்டுக்கடன் இஎம்ஐ இனி எவ்வளவு உயரும்.. வங்கிகள் முடிவு என்ன? சமானியர்கள் அறிய வேண்டியது என்ன?
கடந்த 10 மாதத்தில் மட்டும் 7 முறை வங்கிகளின் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனால் Floating ரேட்டில் ( Fixed இல்லை) கடன் வாங்கியவர்களுக்கு, 50 லட்சங்களில் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக்கடன் அளவு கணிசமாக உயரும
சென்னை: கடந்த 10 மாதத்தில் மட்டும் 7 முறை வங்கிகளின் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனால் Floating ரேட்டில் ( Fixed இல்லை) கடன் வாங்கியவர்களுக்கு, 50 லட்சங்களில் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக்கடன் அளவு சுமார் 7 லட்சம் அளவிற்கு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாம். மாத தவணை சராசரியாக சுமார் 7,000 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதாவது கடந்த 10 மாதத்தை ஒப்பிடும் போது இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் என்கிறார்கள்.
புதியதாக வீட்டுக்கடன் வாங்குறவங்களுக்கு 10%லிருந்து வட்டி 12% வரை போகும். ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியவர்களின் வட்டி இந்த 10 மாதத்தில் 3.6% அதிகரித்திருக்கும். இதனால் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 20% வரை கூடும். தனிநபர், வாகன கடன்களின் வட்டிகளும் கன்னாபின்னாவென்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் கடந்த 2022 ஏப்ரலில் 4 சதவீதமாக இருந்தது. அது கடந்த 2022 மே மாதம் 4.4 சதவீதமாகவும், ஜூன் மாதம் 4.9 சதவீதமாகவும் உயர்ந்தது. இதேபோல் ஆகஸ்ட் மாதம் 5.4 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 5.9 சதவீதமாகவும், டிசம்பரில் 6.25 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில் 6.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக கடந்த 2022 ஏப்ரலில் இருந்து தற்போது வரை 7முறை உயர்ந்துள்ளது. மொத்தம் 2.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

நம்பிக்கை
நிதிக்கொள்கை முடிவுகளுக்கு பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசுகையில்.. கடந்த 3 ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளையும், போக்கிலும் எதிரொலித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலைமை சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாக இல்லை, உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படுகின்றன. அதே போல் பணவீக்கமும் இறங்குமுகமாக உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதம் உயர்வு என்பது ஏற்கனவே Floating ரேட்டில் கடன் வாங்கியவர்களுக்குத்தான் கூடுதல் சுமையாக இருக்கும். அதேநேரம் Fixed ரேட்டில் கடன் வாங்கியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இனிமேல் Fixed or Floating எந்த ரேட்டில் வீட்டுக்கடன் வாங்க போனாலும் உயர்வாகவே இருக்கும். வாகன கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவை உயரலாம். விரைவில் வங்கிகள் இதற்கான அறிவிப்பை வெளியிடலாம்.

7000 உயரலாம்
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலோ அல்லது குறைத்தாலோ அதன்படியே வீட்டுக்கடன் வட்டி விகிதம் மாறுபடும் அளவான Floating ரேட்டில் 50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த 10 மாதங்களை ஒப்பிடும் போது இஎம்ஐ மாதம் சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என்கிறார்கள். 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இஎம்ஐ உயர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்

எப்படி சமாளிப்பது
தற்போது ரெப்போ வட்டி அதிகரிப்பால் வங்கிகளில் தனி நபர் வாங்கும் வாகன கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் என்று எல்லா விதமான கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது உயரும். வட்டி அதிகரிக்கும் என்றால் மாதம் நாம் காட்டும் கடன் தொகை அதிகரித்துள்ளதே? எப்படி சமாளிப்பது என்று யோசித்திருப்பீர்கள். வங்கிகள் இதற்கும் ஒரு வழியை கையாள்கின்றன.

EMI தொகை
வட்டி அதிகரிக்கும் பட்சத்தில் மாத மாதம் அதிக தொகையை சாதாரண மக்களால் கட்ட முடியாது நிலை ஏற்படும். அவர்களின் அன்றாட வீட்டு பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வழக்கமாக கட்டும் மாதாந்திர EMI தொகையை அதிகரிப்பதற்கு பதிலாக கடனின் காலத்தை வங்கிகள் அதிகரிக்கவும் செய்கின்றன. 10 வருடம் செலுத்தும் கடன் என்றால் அதற்கு பதிலாக கூடுதலாக சில மாதங்கள் கடன் கட்ட வேண்டிய நிலை வரும். எனவே புதிதாக கடன் வாங்கப்போறவங்க இதை கவனிக்கனும பிப்ரவரி மாத ரெப்போ ரேட் விகித உயர்வின் பலனை வங்கிகள் தங்கள் எஃப்டிகளில் எவ்வளவு உயர்த்தப்போகின்றன என்பது இனிதான் தெரியவரும். அண்மையில் தான் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் புதிய வருமான வரி விகிதம்படி வரி கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications