சந்திரயான் 3.. இந்தியாவை வீழ்த்த அவசரப்பட்ட ரஷ்யா! நிலவின் தென்துருவ போட்டியில் தோல்வி? என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென் துருவத்தை யார் முதலில் அடைவது என்ற போட்டி இந்தியா - ரஷ்யா இடையே ஏற்பட்டு உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மட்டுமே தற்போது உள்ளது.. ரஷ்யா இதில் தோல்வி அடைய காரணம் அதன் அவசரம் என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்!

ஒரு காலத்தில் அமெரிக்கா - சோவியத் இடையே விண்வெளி போட்டி மிக தீவிரமாக இருந்து வந்தது. அப்போது ஸ்புட்னிக் உள்ளிட்ட விண்வெளி திட்டங்கள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் முதல் இடத்தில் இருந்தது. 1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலமே முதலில் நிலவைச் சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.

How did Russia fail to reach moon south pole? Was Luna 25 competing with Chandrayaan 3?

அந்த அளவிற்கு இந்த திட்டங்களில் சோவியத் முன்னிலையில் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நாஸாவோ சோவியத் யூனியனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நேரடியாக நிலவிற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்தது. அதன் முடிவாக அப்பல்லோ 11 விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20, 1969 அன்று நிலவில் முதல் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் நாசா வென்றது.

ஆனால் அதன்பின்பெல்லாம் விண்வெளி பயணங்களுக்கு நாசா என்னவோ ரஷ்யாவைத்தான் நம்பி இருந்தது. அதன்பின் ரஷ்யாவும் பெரிதாக விண்வெளி ஆராய்ச்சிகளில் நேரடியாக கவனம் செலுத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் கடந்த 10 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவுடன் போட்டி: அந்த வகையில்தான் நிலவின் தென் துருவத்தை ஆராய ரஷ்யா லூனா 25 திட்டத்தை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த 50 வருடங்களில் நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் ஆய்வு திட்டம் ஆகும் இது. இந்த லூனா 25 லேண்டர் நிலவில் உயரும் குறைக்கும் நேரத்தில் அப்படியே கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது.

தென் துருவத்தில் இந்த 800 கிலோ எடை கொண்ட லூனா 25 தரையிறங்கி சாதனை படைக்க இருந்தது. அதாவது கணக்குப்படி நாளை இந்த லூனா 25 தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் நேற்றே உயர குறைப்பு செய்யும் போது இது கீழே விழுந்துவிட்டது.நிலவில் இருந்து ஒருவருடம் ஆய்வு செய்வதுதான் லூனா 25ன் திட்டம் ஆகும்.

அங்கிருந்து மணல் சாம்பிள்களை எடுப்பது,. தண்ணீரை தேடுவது இதன் திட்டமாக இருந்தது. ஏற்கனவே நிலவை சுற்றிக்கொண்டு இருந்த போது இது புகைப்படம் கூட எடுத்து அனுப்பியது.

அவசரம்: இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன் வேகமாக இறங்க வேண்டும் என்று லூனா 25 அவசரமாகவே நிலவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. இந்தியா போல புவி ஈர்ப்பு விசை , வட்டப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி பயணிக்காமல், நேரடியாக நிலவை நோக்கி செல்லும் வகையில் இது அனுப்பப்பட்டது.

ராக்கெட்டை பல காலமாக உருவாக்கி இருந்ததில் இதில் ரஷ்யா எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் வேக வேகமாக லூனா 25 ஐ உருவாக்கி ரஷ்யா அவசரப்பட்டது. அதிலும் இஸ்ரோ சந்திரயான் 3ஐ அனுப்பும் வரை லூனா 25ஐ அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா இல்லை. சந்திரயான் 3 அனுப்பிய பின்பே திடீரென லூனா 25 அனுப்பும் தேதியை ரஷ்யா முடிவு செய்தது.

இதன் அர்த்தம் நிலவின் தென் பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெயர் இருக்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. நிலவிற்கு மனிதரின் பொருளை இறக்கிய முதல் நாடு ரஷ்யா என்பதால் தென் துருவத்தில் தங்கள் பொருளே முதலில் இறங்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. இதன் காரணமாகவே சந்திரயான் 3 அனுப்பப்பட்ட பின் அவசர அவசரமாக லூனா 25 அனுப்பப்பட்டது.

இதனால் கடைசி கட்டத்தில் லூனா 25 லேண்டரில் சரியாக ஆய்வுகளை செய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பழுதே கடைசியில் லூனா 25 இறங்கும் போது அது தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. லூனா 25 வின் உயரத்தை குறைக்கு அதற்கு கொடுத்த கமெண்ட்டை லூனா 25 ஏற்கவில்லை. மாறாக லூனா 25 கமெண்ட்டை தவறாக எடுத்துக்கொண்டு மொத்தமாக போய் நிலவில் விழுந்துள்ளது.

போட்டி தோல்வி: ஆனால் இதை கொண்டாட எதுவும் இல்லை. லூனா 25 தோல்வி என்பது ரஷ்யாவின் தோல்வி அல்ல.. அது அறிவியலின் தோல்வி. ஒரு காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணங்களுக்கு உதவியது என்னவோ ரஷ்யா என்ற ஒரே நாடுதான். உலக நாடுகள் இந்தியாவிற்கு கிரையோஜெனிக் எஞ்சின் தராத போது விண்வெளி ஆய்வுகளை செய்ய உதவியது ரஷ்யா மட்டும். இருந்தாலும் நேற்று அவர்களின் திட்டம் உதவியது,

நாளை மறுநாள் சந்திரயான் 3 வெற்றிபெறும் பட்சத்தில் அது இந்தியாவின் வெற்றியாக மட்டும் இருக்காது.. அறிவியலின் வெற்றியாகவும் இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+