Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"69% வாக்குப்பதிவு.." ஆமா தமிழகத்தில் வாக்கு சதவீதம் எப்படி கணக்கிடப்படுகிறது? இதுல இவ்வளவு இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகு இப்போது தான் வெளியானது. சரி இந்த வாக்குப்பதிவு சதவிகிதத்தை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

இந்த முறை நமது நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

How is vote percentage calculated for lok Sabha election 2024 in tamilnadu

வாக்குப்பதிவு விகிதம்: நேற்று மாலையே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த போதும், தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பம் நிலவியது. நேற்று மாலை 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி நம்பரில் வாக்குப்பதிவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது.

தாமதம்: இறுதி நம்பர் காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வாக்குப்பதிவு முடிந்து சுமார் 24 மணி நேரம் கழித்து இன்று மாலை 7 மணியளவில் தான் வெளியானது. தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அதிகபட்சமாகத் தருமபுரியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகளும் பதிவாகி உள்ளது.

எப்படி கணக்கிடுவார்கள்: சரி இப்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விகிதத்தை எப்படிக் கணக்கிடுவார்கள் என்பதை நாம் பார்க்கலாம். தமிழ்நாடு முழுக்க சுமார் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. அந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடத்த அதிகாரி ஒருவர் இருப்பார். ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருக்கும் இந்த வாக்குச்சாவடி அதிகாரி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவிகிதத்தை வட்டார அளவில் இருக்கும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.

பொதுவாக ஒரு எம்பி தொகுதியில் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் எம்பி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இந்த டேட்டோவை அனுப்பி வைப்பார்கள். இந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட அளவில் பெற்ற தகவல்களைச் சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள். அதை வைத்தே இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியாகும் வாக்குப்பதிவு சதவிகிதம் இருக்கும்.

இறுதி நம்பர்: பிறகு இறுதியாக மாலை நேரத்தில் 17சி விண்ணப்பத்தில் வாக்களித்த வாக்காளர்களின் கையெழுத்து, அந்த வாக்குச்சாவடியில் இருக்கும் மொத்த வாக்குகள் ஆகியவை கணக்கிடப்பட்டு இறுதி அறிக்கை அனுப்பப்படும். இது கொஞ்சம் நீண்ட பிராசஸ்.. இதன் காரணமாகவே எப்போதும் இறுதி அறிக்கை தாமதமாக வெளியாகக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் இப்போது தான் பொதுவாக வாக்குப்பதிவு சதவிகிதத்தைக் கணக்கீடு செய்வார்கள். ஆனால் நேற்றைய தினம் 5 மணிக்குப் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதத்தை வைத்து 5 மணிக்கு இந்தளவுக்குப் பதிவாகி இருக்கிறது என்றால் 7 மணிக்கு இவ்வளவாக இருக்கும் என்ற கணித்து வெளியிட்டுள்ளனர். மேலும், இதற்காகச் செயலி ஒன்றை வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட பிழைகளும் வாக்குப்பதிவைக் குறைவாகக் கணக்கிடக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+