சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காட்டு பகுதியில்.. மல்லிகை ஃபார்ம்.. நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கிய ஜெயகோபால்..!

கிருஷ்ணகிரியில் ஜெயகோபாலை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ விவகாரம்.. முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு அக்.11 வரை சிறை-வீடியோ

    சென்னை: காட்டுப்பகுதியில் உள்ள மல்லிகை ஃபார்ம்.. இந்த ரிசார்ட்டில் நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கி இருந்திருக்கிறார் ஜெயகோபால்! தன்னுடைய செல்போனில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியபோது வசமாக போலீசில் சிக்கி கொண்டுள்ளார்.

    எப்படியாவது ஜெயகோபாலை பிடித்துவிடுவோம் என்று ஐகோர்ட்டில் உறுதி தந்ததையடுத்து, பரங்கிமலை போக்குவரத்து போலீசாரும், பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஜெயகோபாலை கைது செய்வதில் தீவிரம் காட்டினர்.

    இதற்காகவே 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜெயகோபால் செல்போன் கால்கள் டிரேஸ் செய்யப்பட்டன. அவரது சொந்தக்காரர்கள் வீடுகளிலும் தேட ஆரம்பித்தனர்.

    என்னா ஒரு வெறித்தனம்.. தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகியின் ரவுடித்தனம்என்னா ஒரு வெறித்தனம்.. தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகியின் ரவுடித்தனம்

     பணம்

    பணம்

    இந்த சமயத்தில்தான், அவரது செல்போனில் நேற்று பணம் டிரான்ஸ்சேக்‌ஷன் நடந்தது தெரிந்தது. பணம், ஒகேனக்கல், தருமபுரி, திருச்சி பகுதிகளுக்கு பரிமாற்றம் ஆனது கண்கூடாக தெரிந்தது. இது உறுதியானதை அடுத்து, போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து ஒகேனக்கல், திருச்சி, தருமபுரி பகுதிகளுக்கு நேற்று விரைந்தனர்.

     சிறப்பு கவனம்

    சிறப்பு கவனம்

    அங்குள்ள முக்கிய ஹோட்டல்கள், ரிசார்ட்களில் தேடும் படலம் நடந்தது. அப்போது, ஒகேனக்கலில் உள்ள தனது நண்பர் ரஜினி என்பவருடன் ஜெயகோபால் பேசியது தெரிய வந்ததுமே, தருமபுரியில் போலீசார் சிறப்பு கவனம் செலுத்தினர்.

     தனியார் ரிசார்ட்

    தனியார் ரிசார்ட்

    பிறகுதான் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் ஒரு மல்லிகை பார்ம் பகுதி ரிசார்ட்டில் ஜெயகோபால் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அது ஒரு தனியார் ரிசார்ட் ஆகும். காட்டுப்பகுதியில் இருக்கிறது. இங்குதான் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் ஜெயகோபால் தங்கி இருப்பது தெரியவந்தது.

    ரஜினி

    ரஜினி

    நண்பர் ரஜினிதான், ஜெயகோபால் குடும்பத்துடன் இங்கு தங்க உதவி இருக்கிறார். நண்பர் ஆபிரகாரம் என்பவர் பெயரில்தான் ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை ராத்திரி 9.30 மணிக்குதான் இந்த ரிசார்ட்டில் ரூம் புக் செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஒவ்வொரு ஊராக ஜெயகோபால் குடும்பத்தினர் தலைமறைவாகி சுற்றி வந்துள்ளார்.

     சிக்கினார்

    சிக்கினார்

    இப்போது இந்த ரிசார்டையும் காலி செய்வதற்குதான், டெபிட்கார்டு மூலம் ஜெயகோபால் பணம் செலுத்தி இருக்கிறார். ஜெயகோபால், மனைவி, மகன், நண்பர் ஆபிரகாம் என மொத்தம் 5 பேர் இந்த ரூமில் தங்கி உள்ளனர். இதற்கு பிறகுதான தனிப்படை போலீசார் ரிசார்ட்டை சுற்றி வளைத்து ஜெயகோபாலை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

    English summary
    How was Ex AIADMK Councilor Jayagopal arrested by Special team in Thenkanikottai near Krishnagiri
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X