குடும்ப நகைகளுக்கு சிக்கலா? வீட்டில் தங்க நகையை எவ்வளவு இருப்பு வைத்திருக்கலாம்? வெளியான புதிய தகவல்
சென்னை: ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் அதிக சொத்து மதிப்பு கொண்ட பொருட்களை வருமான வரி தாக்கலில் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில், வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை நாம் வைத்திருக்கலாம் என்பது குறித்தும் வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் தங்கத்தை எவ்வளவு வீட்டில் வைத்திருக்கலாம்? வருமான வரி துறை இதற்காக எத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது குறித்து வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
நம்முடைய இந்தியாவிலேயே முக்கியமாக தென்னிந்தியாவில், தங்கம் மிகுந்த கவுரவம் தரக்கூடிய பொருளாக மதிக்கப்படுகிறது... எனவேதான் பிறப்பு முதல் திருமணம் வரை என வாழ்வின் அனைத்து மகிழ்ச்சி தருணங்களிலும், தங்க நகைகளுக்கென்று பிரத்யேக இடம்பெற்று வருகிறது.

தென்னிந்தியாவிலேயே, அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான். ஏனென்றால், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது.. தங்கத்தின் மதிப்பும், விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் விலை உயர்ந்தாலும், தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்குவது மட்டும் மக்களிடம் குறைவில்லை.
தங்கத்தில் முதலீடு
அதுபோல, தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு நல்ல தேர்வாகும். எனவேதான் சிலர் தங்கத்தை வீடுகளிலும் வைத்திருப்பார்கள். இதற்கு காரணம், வீட்டில் தங்கம் இருந்தால், அந்த குடும்பமே செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கை பலரிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது.
அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, தங்களது வீட்டில் நகைகளை வைத்திருப்பதிலேயே பலருக்கும் விருப்பம் உள்ளது. அப்படி வீட்டில் தங்கம் வைப்பதற்கும் வரம்பு உள்ளது. எவ்வளவு தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வரித்துறையும் பலமுறை தெளிவுபடுத்தியும், விவரித்தும் வருகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த1994ம் ஆண்டில், தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளின்படி, ஒரு நபரின் பாலினம், திருமண நிலை போன்றவற்றின் அடிப்படையில் நகைகளை வைத்து கொள்ளலாம்.
வீட்டில் தங்கம் எவ்வளவு
அதன்படி, திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக் கொள்ளலாம்.
திருமணமான மற்றும் திருமணமாகாத என 2 தரப்பு ஆண்களுமே, 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம். சோதனையின்போது மேலே குறிப்பிட்ட அளவுள்ள தங்க நகை வாங்கியதற்கான ஆவணங்கள் இல்லையென்றாலும், அவற்றை பறிமுதல் செய்ய முடியாது.
தங்கம் பரிசு, வருமான வரி
தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை காட்ட வேண்டிவரும்.. வருமான வரிக் கணக்கிலும் இதை குறிப்பிட்டாக வேண்டும். வரிசோதனையின்போது பிடிபடும் கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீதம் வரி விதிக்கப்படும்..
வருமான வரித்துறையின் சோதனையின்போது, வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காகவே மேற்கண்ட விதிகள் உருவாக்கப்பட்டு, இதுதான் தற்போது நடைமுறையிலும் உள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வருமான வரி துறை இதற்காக எத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது குறித்து வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
குடும்ப நகைகள்
அதில், "வருமான வரித்துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, ஆவணங்கள் இல்லாத நிலையில் ''பாதுகாப்பான அளவு'' எனக் கருதப்படும் சில நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சம் 500 கிராமும் (அதாவது 62½ பவுன்), திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராமும் (அதாவது 31.25 பவுன்) மற்றும் திருமணமான, திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் (அதாவது 12½ பவுன்) தங்கம் வரை வைத்திருந்தால், அது ''வழக்கமான குடும்ப நகைகள்'' எனக் கருதப்பட்டு வருமான வரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படாது.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவு ஏற்று கொள்ளப்படும். இந்த அளவுகளுக்கு மேல் தங்கம் இருந்தாலும், அதன் வாங்கிய மூலத்தை நிரூபிக்க முடியுமானால் எந்த சிக்கலும் இல்லை.
பரிசளிப்பு நகைகள் - ஆவணங்கள்
ஆனால் ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவில் தங்கம் வைத்திருந்தால், அது கணக்கிலிடப்படாத வருமானம் என கருதப்பட்டு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இத்துடன், தங்கத்தின் வகையான நகைகள், நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகிய அனைத்தும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
திருமண நகைகள், பரிசளிப்பு நகைகள் போன்றவற்றின் பதிவுகளை வைத்திருப்பது நல்லது. மொத்தத்தில் சொல்லப்போனால், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் அதன் மூல ஆதாரம் தெளிவாக, ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்" என்று சோஷியல் மீடியாவில் பரவிவரும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications