ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால்.. இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு உயரும்?
சென்னை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு கூடும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளார். இது உலக நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக போராக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

இந்தியாவுக்கு கடும் பாதிப்பு?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியா இறங்கி வரும் என டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால், இந்தியா எதையும் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஆழமாக இறங்கியுள்ளது. இருப்பினும் இந்த கூடுதல் வரிவிதிப்பு இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய தொழில் அமைச்சகத்தின் கணக்குப்படி, கடந்த 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ரூ.37 லட்சம் கோடி. இறக்குமதி ரூ.60 லட்சம் கோடி. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.7 லட்சம் கோடிக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 19.7 சதவீதம் ஆகும். தற்போது இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வளவு பாதிப்பு ஏற்படும்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது விவாத பொருளாகி இருக்கிறது. இருப்பினும் சராசரியாக 30 முதல் 50 சதவீதம் வரை பாதிப்பு இருக்கும் என்று தொழில் அதிபர்கள் கணிக்கிடுகின்றனர். அப்படியானால் தற்போது இருக்கும் ரூ.7 லட்சம் கோடி அமெரிக்கா ஏற்றுமதி மதிப்பு, ரூ.3.5 லட்சம் கோடி வரை ஆகிவிடும்.
இது ஒருபக்கம் இருக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு கூடும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவுக்கு நடப்பு நிதி ஆண்டில் மட்டும் கூடுதலாக 9 பில்லியன் டாலர் செலவு ஆகும் என்று ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வெள்யிட்டுள்ள ஆய்வறிககியில் கூறப்பட்டுள்ளது.
10 சதவீதம் விலை உயரும்
அதாவது, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு ரூ. 76,500 கோடி. அடுத்த நிதியாண்டில், 12 பில்லியன் டாலர். எளிதாக சொல்வது என்றால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அனைத்து நாடுகளும் நிறுத்தி விட்டு எண்ணெய் வளம் மிக்க நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications