Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கோட்டையில் ஓட்டை போட போகும்.. நாம் தமிழர்.. பாஜகவை விடுங்க.. "மைக்" போடும் செம்ம ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிமுகவின் வாக்கு வங்கியை வெகுவாக பிரிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் தமிழர் சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How Naam Tamilar party will make a dent in AIADMK vote bank of Tamil Nadu Lok Sabha election

இது தொடர்பாக நம்மிடையே பேசிய அரசியல் கள வல்லுனர்கள், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக வாக்குகள் பிரியும். எடப்பாடி ஒரு பக்கம் வாக்குகளின் ஷேரை எடுப்பார். ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறைந்தபட்ச ஷேரை எடுப்பர். நாம் தமிழர் சீமானும் அதிமுக வாக்குகளை பிரிப்பார்.

ஜெயலலிதா இருந்த போது 1 சதவிகித வாக்குகளை மட்டுமே சீமான் எடுத்தார். ஆனாலும் ஜெயலலிதா இருந்த போது எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை விட அதிக கூட்டத்தை ஈர்த்தது சீமான்தான். இனப்பிரச்சனை தொடங்கி தமிழர் பிரச்சனை வரை பல விஷயங்கள் பற்றி சீமான் பேசி வருகிறார். ஜெயலலிதாவும் ஈழப்பிரச்சினை பற்றி பேசினார். ஆனால் இப்போது எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இதை பற்றி பேசுவது இல்லை.

2021ல் சீமான் 7 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால் ஜெயலலிதா இருந்த போது அதிமுக 41 சதவிகித வாக்குகளை பெற்றது. அதுவே எடப்பாடி - ஓபிஎஸ் கீழே இந்த வாக்குகள் 33 சதவிகிதமாக குறைந்தது. எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழரின் மொழி சார்ந்த பிரச்சனைகளை பேசுவது இல்லை. அதுவும் இதற்கு காரணம். கடந்த முறை சீமானுக்கு ஒரு பூஸ்ட் கிடைத்தது.

அது இந்த முறை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் கள வல்லுனர்கள். அதாவது, அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளது. வாக்கு பிரியும். தற்போது இவர்கள் இருவரின் மோதல் காரணமாக மீண்டும் சீமானுக்கு பூஸ்ட் கிடைக்கும். அதோடு சீமான் ஆதி தமிழருக்கு தனி தொகுதி இல்லை, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று சீமான் பேசுகிறார். இப்படி சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் சீமான் பேசுகிறார்.

அதிமுக செய்ய வேண்டியதை சீமான் செய்கிறார். அவர்களின் வாக்குகளை சீமான் பிரிக்க வாய்ப்புகள் உள்ளன. சிஏஏ பற்றி சீமான் தெளிவாக பேசுகிறார். எடப்பாடி மாறி மாறி நிலைப்பாடு எடுக்கிறார். அதிமுக பிளவால் தமிழ் தேசியம் கண்டிப்பாக பலன் அடையும். இந்த பிளவு சீமானுக்கும் ஒரு பூஸ்ட் கிடைக்கும்.

அதேபோல் இந்துத்துவா அமைப்புகளுக்கும் இந்த பிளவால் பலன் கிடைக்கும். அதிமுகவிடம் இருந்து ஒரு வாக்கு வங்கியை இந்துத்துவா அமைப்புகள் எடுக்கும். அதாவது பாஜக கூட்டணி எடுக்கும். ஜெயலலிதா ஒரு வித இந்துத்துவா சார்பை கொண்டு இருந்தார். இப்போது அவர் இல்லாததால் அந்த வாக்குகள் இந்துத்துவா அணிகளுக்கு செல்லும். அதுவே அதிமுகவிற்கு சென்ற குறைந்தபட்ச இஸ்லாமிய, சிறுபான்மையின வாக்குகள் நாம் தமிழருக்கு செல்லும், என்று கள அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவிற்கு சென்ற வாக்குகள் கட்சி பிளாவால் கொஞ்சம் நாம் தமிழர் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால் எதிர்க்கட்சி வாக்குகளை நாம் தமிழர் பிரிக்கும் திமுக மீது நேரடி அட்டாக் காரணமாக திமுக அதிருப்தி வாக்குகள் சில நாம் தமிழருக்கு செல்லும் சிறுபான்மையினர், தலித் மக்கள் சிலர் திமுகவிற்கு மாற்றாக நாம் தமிழரை கருதுவது சாதகமாக அமையும், என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

சின்னம் விவகாரம் மட்டுமே நாம் தமிழருக்கு எதிராக இருக்கும். மற்றபடி வேறு பிரச்சனை இருக்காது என்கிறார்கள் கள வல்லுனர்கள்.

இந்த 10 தொகுதிகளில் ஏற்கனவே திமுக - பாஜக - அதிமுக இடையே கடுமையான போட்டிகள் உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இதனால் சில இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் கட்சியாகவும், சில இடங்களில் இரண்டாம் இடங்களை தீர்மானிக்கும் கட்சியாகவும் நாம் தமிழர் இருக்க போகிறது.

2019 தேர்தல் வரலாறு: திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+