துணை முதல்வராக உதயநிதி.. முதல்வரின் அதிகாரங்கள் இவருக்கும் இருக்குமா! சட்டம் சொல்வது என்ன?
சென்னை: உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது அது நடந்துள்ளது. அவர் இன்று துணை முதல்வராகப் பதவியேற்கும் நிலையில், இந்த துணை முதல்வர் பதவி என்பது இந்திய அரசியலில் எப்படி நுழைந்தது. இப்போது எந்தெந்த மாநிலங்களுக்குத் துணை முதல்வர்கள் உள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்திய அரசியலில் துணை முதல்வர் நியமனம் எல்லாம் புதிது இல்லை. பெரும்பாலான நேரங்களில் அரசியல் சமரசம் காரணமாகவே துணை முதல்வர் நியமிக்கப்படுகிறார். பல மாநிலங்களில் கூட்டணி அரசு அமையும் போது அல்லது ஒரே கட்சியில் இரு வலுவான முதல்வர்கள் இருக்கும் போது துணை முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

பீகார் துணை முதல்வர்: பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு இப்போது ஜேடியு- பாஜக கூட்டணி அரசு இருக்கிறது. முதல்வர் பதவியில் ஜேடியு கட்சித் தலைவர் நிதிஷ்குமார் இருக்கிறார். அதேநேரம் துணை முதல்வர் பதவியில் விஜய் சின்ஹா, சாம்ராட் சௌத்ரி ஆகியோர் உள்ளனர். இது ஒரு டைப்.
அடுத்து ஒரே கட்சியில் இரு வலுவான தலைவர்கள் இருந்தாலும் ஒருவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும். உதாரணம் கர்நாடகா. அங்குக் காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் என இரு வலுவான தலைவர்கள் உள்ளனர். சித்தராமையா முதல்வராக உள்ள நிலையில், சிவக்குமார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கூட முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்த போது ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
அரசியலமைப்பு சட்டம்: நமது அரசியலமைப்பின் பிரிவு 163(1) "ஆளுநர் தனது பணிகளைச் செயல்படுத்த உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு இருக்க வேண்டும்" என்று தெளிவாகக் கூறுகிறது. அதேபோல பிரிவு 163 அல்லது பிரிவு 164 (1) "முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்" என்று கூறுகிறது.
அதாவது துணை முதல்வர் பதவி குறித்து அரசியலமைப்பு நேரடியாக எங்கும் கூறவில்லை. எனவே, துணை முதல்வர் பதவி என்பது கேபினட் அமைச்சருக்கு (மாநிலத்தில்) சமமான பதவி என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகள் துணை முதல்வருக்குக் கிடைக்கும். மேலும், துணை முதல்வர் பதவி என்பது முதல்வர் பதவியைப் போலக் கட்டாயம் இருக்க வேண்டிய பதவியும் இல்லை. இதன் காரணமாகவே இப்போது பல மாநிலங்களில் துணை முதல்வர் பதவியில் யாரும் இல்லை.
துணை முதல்வர்கள்: அதேபோல எத்தனை துணை முதல்வர்கள் இருக்கலாம் என்பதற்கும் கட்டுப்பாடு இல்லை. இதனால் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்த போது சில ஆண்டுகள் 4 துணை முதல்வர்கள் கூட இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுக்ரஹ் நாராயண் சின்ஹா என்பவர் தான் நாட்டிலேயே முதல் முறையாகத் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட தலைவர். இவர் 1946 முதல் 1957ல் அவர் இறக்கும் வரை பீகாரின் துணை முதல்வராக இருந்தார். அதன் பிறகே மற்ற பல மாநிலங்களிலும் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.
துணைப் பிரதமர்: மாநிலத்திற்கு எப்படி துணை முதல்வரோ அதுபோல நாட்டில் சில துணைப் பிரதமர்களும் இருந்துள்ளனர். கடைசியாக அத்வானி 2002 முதல் 2004 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். அதற்கு முன்பு மொரார்ஜி தேசாய், சரண் சிங், சவுத்ரி தேவி லால் உள்ளிட்டோர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர். 1989ம் ஆண்டில் வி.பி. சிங் தேவிலால் துணைப் பிரதமராக நியமித்த போது, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முக்கியமானது. துணைப் பிரதமர் நியமனத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், "துணை பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டாலும் அவர், அமைச்சரவையில் உள்ள மற்ற உறுப்பினர்களைப் போலத் தான்.. துணைப் பிரதமர் என்று அழைக்கப்பட்டாலும் அது அவருக்குப் பிரதமருக்கான அதிகாரத்தையும் வழங்காது" என்று கூறியது. எனவே, துணை பிரமதர் பதவிக்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நாம் துணை முதல்வர் பதவிக்கானதாகவும் பார்க்கலாம் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications