ஒரு ஜெராக்ஸ் தான்.. மடிப்பாக்கம் வங்கி ஊழியரின் 40 லட்சம் மதிப்புள்ள நிலம் காலியானது எப்படி?
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சிவராஜ் என்பவருக்கு மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 1,800 சதுர அடி நிலம் இருந்தது. அதனை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்றுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் கொடுங்கையூர் தவமணி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த மாதவரம் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் நிலத்தின் மதிப்பு மிக அதிகம்.. சென்னையில் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் சில இடங்களில் எல்லாம் இடமே வாங்க முடியாது. சென்னையின் புறநகர் பகுதிகளிலேயே இன்று இடம் வாங்க 30 லட்சம் 40 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பிறரது நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

போலி ஆவணங்கள்
அவர்களுக்கு சிலர் போலி ஆவணங்களையும் தயார் செய்து கொடுக்கிறார்கள்.. அந்த போலி ஆவணங்களை வைத்து பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே மாற்றி விடுகிறார்கள். எனவே அவ்வப்போது உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் உள்ளதா என்பதை ஆய்வு செய்து கொள்ளுங்கள். பட்டாவில் உங்கள் பெயர் தான் உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் சென்னையில் வயதான ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் நிலத்தை குறிவைத்து மோசடி செய்திருக்கிறார்கள்.
பத்திரத்தின் நகல்கள்
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சிவராஜ் (68) என்பவருக்குச் சொந்தமான, மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 1,800 சதுர அடி நிலத்தை, பத்திரத்தின் நகல்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து விற்றுள்ளனர். இது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட கொடுங்கையூர் தவமணி (68) மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த மாதவரம் சுரேஷ்குமார் (53) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்திருந்தால், எப்படி திரும்ப நிலத்தை பெறுவது
போலி ஆவணம் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் உங்கள் நிலம் வேறு ஒருவருக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை மீட்டெடுக்க இப்போது சட்டப்பூர்வமாக சில எளிய மற்றும் வலிமையான வழிகள் உள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பதிவுச் சட்டம் திருத்தப்பட்ட பிறகு இது இன்னும் எளிதாகிவிட்டது.
மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளித்தல்
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி (பிரிவு 77A), போலி ஆவணங்கள் மூலம் நடந்த பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் நிலம் உள்ள மாவட்டத்தின் மாவட்டப் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும். பதிவாளர் அவர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்துவார். ஆவணம் போலி என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தப் பத்திரப் பதிவை அவரே ரத்து செய்து உத்தரவிடுவார்.
ஆள்மாறாட்டம்
ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் ஆகியவை கிரிமினல் குற்றங்கள். எனவே நிலம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் மோசடி செய்தவர்களை கைது செய்யப்படுவார்கள்.
போலீஸ் எப்.ஐ.ஆர்
இந்த போலீஸ் எப்.ஐ.ஆர் உங்கள் வழக்கை வலுப்படுத்தும். அதேபோல் மாவட்டப் பதிவாளர் ரத்து செய்தாலும், சில சிக்கலான சூழல்களில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை வரலாம். அப்போது "போலி ஆவணம் செல்லாது" என்று தீர்ப்புப் பெற வேண்டும். நீதிமன்றம் மூலம் 'உறுத்துக் கட்டளை' பெற்று, அந்த நிலத்தை அந்த நபர் மேலும் யாருக்கும் விற்காமல் தடுக்கலாம். ங்கள் நிலத்தில் "இந்த நிலம் எனக்குச் சொந்தமானது, இதன் மீது நீதிமன்றத்தில்/பதிவுத் துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது" என்று ஒரு அறிவிப்புப் பலகை வைக்கலாம்.












Click it and Unblock the Notifications