"நேதாஜி" வகுத்த பாதை.. நேருஜி சொன்ன "அந்த" முதல் வார்த்தை.. அப்படியே அதிர்ந்து போன செங்கோட்டை
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் எப்படி இருந்தது தெரியுமா
சென்னை: வருடாவருடம் செங்கோட்டையில் சுதந்திரத்தின்று, கொடியேற்றி மரியாதை செலுத்தி கொண்டாடியும் வருகிறோம்.. எனினும், 1947, ஆகஸ்ட் 15.... சுதந்திரம் பெற்ற தினத்தன்று, நம் நாட்டு மக்களின் உணர்வு அன்றைய நாள் எப்படி இருந்தது தெரியுமா? நம் தலைநகரம் எப்படி இருந்தது தெரியுமா?
ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்பலியிலும், எண்ணற்ற தியாகிகளின் ரத்த வேள்வியிலும்தான் நமக்கு இன்றைய சுதந்திரம் கிடைத்துள்ளது..
சுதந்திரம் என்பது, பல ஆயிரக்கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்ல கூடிய சிறப்பாகும்.

வரலாறு
இதில் முக்கியமானவர்களாக 2 பேர் வரலாற்றில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்கள்.. ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.. இருவருமே சமகாலத்து தலைவர்கள்.. இருவருமே மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள்.. இருவரின் வழிமுறைகள் வேறு வேறாக இருந்தபோதும், இலக்கு என்னவோ ஒன்றாகவே இருந்தது.

காந்திஜி
ஆனாலும், காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.. அதேசமயம், இலக்கை நோக்கிய அரசியல் பயணத்தில் நேதாஜி காந்திஜியைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார்... இன்னமும் இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை..!

சுதந்திரம்
ஒருவழியாக அன்றைய தினம், இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற அறிவிப்பு வெளியாகிவிட்டது.. அன்று ஒருநாள் நாடே மகிழ்ச்சியில் முகிழ்த்தது.. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை... ஆனாலும் தலைநகரில் நம் மக்களின் கொண்டாட்ட முழக்கம் கணீர் கணீரென்றிருந்தது. ஆகஸ்டு 15 சுதந்திரம் தரலாம் என அறிவிக்கப்பட்டவுடனேயே நம்ம ஜோதிடர்கள் வழக்கம்போல, கருத்து சொல்ல வந்தார்களாம்..

சங்கநாதம்
நள்ளிரவு 12 மணி நெருங்கிவிட்டது.. கடிகார மணி அதிர ஓங்கி ஒலித்தது... உடனே ஒரு பெரிய மாடம் ஒன்றிலிருந்து ஒருவர் ஓடி வந்து சங்கநாதத்தை எடுத்து ஊதினார்... இப்படி ஒரு சங்கநாதத்தை ஊதுவதற்காகவே சிறப்பான கலைஞர்கள் அப்போது இருந்தார்களாம்.. சங்கநாதம் நகரமெங்கும் ஒலித்தது... புதிய தேசம், விடியல் தேசம், சுதந்திர தேசம் பிறந்துவிட்டதென சத்தமாக அறிவிக்கப்பட்டது... அப்போது அரங்கம் வெளியே கூடியிருந்த மக்கள் ஒன்றுகூடி, கரங்களை தட்ட ஆரம்பித்தனர்.. நீண்ட நேரத்துக்கு கைகளை தட்டி கொண்டே இருந்திருக்கிறார்கள்.. பிறகு எல்லாரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று ஒன்றாக முழக்கமிட்டுள்ளனர்.

பிரதமர் நேரு
முதல் செயலாக, நேரு தலைமையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நம் தேசத்தை காப்போம், இந்திய மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று நேரு சொல்ல, அதை கேட்டு கூடியிருந்த மக்களும் அதையே திருப்பி திருப்பி சொல்லி உள்ளனர்.. அதையே சபதமாகவும் போட்டுள்ளனர்.. அப்போதுதான், ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வை தட்டியெழுப்பும் நேதாஜியின் ஒற்றை சொல்லான "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையுடன் தன் முதல் சுதந்திர உரையை துவங்கினார் நேரு.

கருத்து வேற்றுமைகள்
நேதாஜிக்கும் சரி, நேருவுக்கும் சரி, ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள் இருந்ததை மறுக்க முடியாது.. ஆளுக்கு ஒருபக்கம் நின்று வெவ்வெறு நிலைகளில் நின்று போராட்டத்தை கையில் எடுத்தவர்கள்தான் என்றாலும், நேதாஜியின் அந்த ஒற்றை சொல் முழக்கம் பாரதத்திற்கு புத்தொளியும், புத்துயிரும் ஊட்டியது... நேருதான் தன் சுதந்திர முதல் உரையில் "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை துவக்கியும் வைத்தவர்.

தமிழகம்
டெல்லியில் இப்படி அன்றைய தினம் இருந்தது என்றார், நம் தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கிராமங்களிலும் மக்கள் மகிழ்ச்சியுடன், பூரிப்புடன் காணப்பட்டனராம்.. பெரும்பாலானோர் கதர் ஆடை அணிந்து கொண்டுள்ளனர்.. கையில் காசு இருப்பவர்கள், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டுள்ளனர்.. நம் தமிழகத்தில்கூட அன்றைய தினம் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கதர் குல்லா இலவசமாக வழங்கப்பட்டு, இனிப்பும் வழங்கப்பட்டதாம்... ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய தேசத்தின் ஒவ்வொரு வீதிகளிலும், நம் மக்கள் "இந்தியன்" என்ற உணர்வுடனும், "என் நாடு" என்ற இறுமாப்புடன் கலந்த சந்தோஷத்துடன் நடை போட்டதை மறக்கவே முடியாது...!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications