Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூச்சுவிட திணறும் சென்னை ஜிஎஸ்டி சாலை.. 20 பாயிண்ட்.. செங்கல்பட்டு டூ திண்டிவனம் பிளான் தாறுமாறு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு திண்டிவனம் இடையே 67.1 கி.மீட்டர் நீளத்திற்கு தற்போது 4 வழிச்சாலை உள்ள நிலையில், அந்த பகுதியில் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது,

இதேபோல், தாம்பரம் செங்கல்பட்டு இடையே 26 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இது ஒருபுறம் எனில், சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கிலோ தூரத்திற்கு மேம்பாலமும், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலமும் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

 how will do 67.1 km long Chengalpattu-Tindivanam stretch of GST will be upgraded to 8 lanes?

சென்னை மாநகரத்தில் இப்போதே வாகன பெருக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. ஒவ்வொரு நொடியும் பெருங்களத்தூரில் கடந்து செல்லும் வாகனங்களே சாட்சி. ஐந்து நிமிடம் எங்காவது ஜாம் ஆனால், சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை மொத்தமாக ஸ்தம்பித்து போகும்.

ஏதேனும் வாகனம் பழுதாகியோ அல்லது விபத்து ஏற்பட்டோ அரைமணி நேரம் வாகனங்கள் சிக்கிக்கொண்டால், சரி செய்ய பல மணிநேரம் ஆகிவிடும். சென்னை முதல் திண்டிவனம் வரை சாலைகளால் ஒரு நிமிடம் கூட மூச்சுக்கூட விட முடியாது. மிகமிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும். நான்கு வழிச்சாலைகள் எல்லாம் எப்போதோ எட்டுவழிச்சாலை ஆகி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் அதற்கான பணிகள் தொடங்க போகின்றன,

தேசிய நெடுஞ்சாலை துறைகள் சென்னையை சுற்றி பல்வேறு திட்டங்களை அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்த போகிறது. ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சென்னை தாம்பரம் செங்கல்பட்டு இடையே 26 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைக்க போகிறார்கள் என்பதை..

ஏன் மேம்பாலம் அமைய வேண்டும்? தாம்பரம்-செங்கல்பட்டு இடையே வர்த்தகம், தொழில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பகலில் எந்த நேரத்திலும், சுமார் 1.53 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.

தாம்பரம் செங்கல்பட்டு இடையே 12 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளன. புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டால், பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உயர்த்தப்பட்ட சாலையில் செல்லும். இதனால் தற்போது உள்ள சாலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

2030 ஆம் ஆண்டில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமையும் மேம்பாலத்தில் 63,605 பயணிகள் கார் தினமும் செல்லும் என்று கணிக்கப்படுகிறது- , அதே நேரத்தில் கீழே உள்ள சாலையில் 82,100 வாகனங்கள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், எஸ்ஆர்எம் கல்லூரிக்கு அருகிலுள்ள பொத்தேரியிலும், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியிலும் ஏறி இறங்கும் வழிகள் இருக்கும்.

சரி செங்கல்பட்டு தாம்பரம் இடையே 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் எப்படி இருக்கும்? 67.1 கிமீ நீளமுள்ள செங்கல்பட்டு-திண்டிவனம் இடையிலான ஜிஎஸ்டி சாலை, தற்போதுள்ள 4 வழிச்சாலையாக இருக்கிறது. இந்த சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 3,458 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு திண்டிவனம் இடையே மாமண்டூர் நகரம், படலம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, மதுராந்தகம் நகரம் மற்றும் சாரம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதைக்கு மேல் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் நெடுஞ்சாலை துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கிலோ தூரத்திற்கு மேம்பாலமும், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலமும் அமையப் போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+