சென்னையை உலுக்கிய நகைக்கொள்ளை.. மங்கிகுல்லா கொள்ளையன், பாய்ந்த கார்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி
சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை: சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பற்றி இரண்டு புதிய சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதர். இவர் தனது பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில் சாலையில் நகைக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் தளத்தில் நகைக்கடையும், இரண்டாம் தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடனும் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி இரவு நகைக்கடையில் வியாபாரம் செய்து விட்டு ஊழியர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். காலை 9 மணி அளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்கு முன்பு, கடையின் முன்பக்க ஷெட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர் கதவை கட் செய்து அதில் இருந்த 5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பு வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த ஸ்ரீதருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நகை கொள்ளை
மேலும் சில நகைகள் நகைக்கடையின் கீழே சிதறி கிடந்தது.கொள்ளையர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவி கம்ப்யூட்டர் இருக்கும் பக்கம் சென்றுள்ளார் ஸ்ரீதர். அப்போது சிசிடிவி வயரை அறுத்துவிட்டு ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதர் கொள்ளை சம்பவம் குறித்து சென்னை திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னையில் பெரம்பூரில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியான பேப்பர் மில்ஸ் சாலையில் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவி காட்சிகள்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வர் உள்ளிட்டோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவு சேகரிக்கப்பட்டன. மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வெல்டிங் மிஷின்
இதில் முதற்கட்ட விசாரணையில் கடந்த 10ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு இனோவா காரில் வந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 2 மணிக்கு வந்த கார், 3 மணிக்கு திரும்பிச் செல்வதாக சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. 5 கிலோ சிலிண்டரை பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரை வெல்டிங் உதவியுடன் சத்தம் இல்லாமல் துளையிட்டு கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. போலீசார் ரோந்து பணிக்கு வராத நேரத்தை கணித்து, கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்திருந்தார்.

9 தனிப்படைகள்
இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாரகள். தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க ஓர் இணை ஆணையர், 2 துணை ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது, தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை தமிழகம்மட்டும் அல்லாமல் பெங்களூரு,ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வெளிமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

போலி வாகனம்
கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்றுவிட்டதால் அதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் சிக்கல் நீடித்து வந்தது. ஏனெனில் நகைக் கடை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் போலீஸாருக்கு போதிய அளவில் கை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்
கொள்ளையர்கள் திருட்டு வாகனத்தில் போலி வாகன எண்களுடன் வந்ததால் அதன் மூலமாகவும் புலன் விசாரணை நடத்துவதிலும் போலீஸாருக்கு பின்னடைவாக இருந்தது.

இரண்டு சிசிடிவி காட்சிகள்
இதனிடையே பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. முகமூடி அணிந்த கொள்ளையன் சுவரில் ஏறி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆந்திர எல்லையில் சென்ற சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆந்திராவில் முகாமிட்டுள்ள போலீசார் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications