Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI வங்கியின் சர்ப்ரைஸ்.. அட 15 நிமிஷத்தில் கடன் பெறலாமே.. பாரத ஸ்டேட் பேங்க் செம.. யாருக்கு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று சொல்லப்படும் எஸ்பிஐ வங்கி, தொழில் கடனுக்காக காத்திருப்போருக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கடன் வசதியை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்ந்து கொண்டிருக்கிறது பாரத ஸ்டேட் வங்கி என்றழைக்கப்படும் எஸ்பிஐ.. தொடர்ந்து வழங்கிவரும் தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை தன்வசம் பெற்றிருக்கிறது எஸ்பிஐ.. அதற்கேற்றவாறு, வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ஏராளமான சலுகைகளையும், புதுபுது அறிவிப்புகளையும் வெளியிட்டுவருகிறது.

state bank of india sbi loan sbi

எஸ்பிஐ வங்கி சேவைகளில், வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் கவர்ந்தது அதன் கடன்வசதிகள்தான்.. தனிநபர் கடன்களில் (Personal Loan) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.. இது தொடர்பாக பலமுறை, பல்வேறு சர்ப்ரைஸ்களை வங்கி வெளியிட்டிருக்கிறது.

தனிநபர் கடன்: சமீபத்தில்கூட ரூ.20 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்து, தனிநபர் கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கியிருந்தது எஸ்பிஐ. அதேபோல, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடன் வழங்குவதாக அறிவித்திருந்தது.

குறிப்பாக, சிறிய அளவிலான கடன்களுக்கான வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, SME (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) டிஜிட்டல் வணிக கடன்கள் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன்மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடனை வழங்க முடியும். கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை கடன் எடுக்கலாம் என்பதால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பானது, மிகப்பெரிய மகிழ்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

கடன் வசதி: இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) பிரிவினருக்கு "MSME Sahaj" என்ற பெயரில் புதிய கடன் வசதியை தற்போது சர்ப்ரைஸாக அறிமுகம் செய்துள்ளது.

MSME நிறுவனங்களுக்கான கடன் பெறும் நடைமுறைகளையும் எளிதாக்கியிருப்பதுடன், கடன் வழங்கும் காலத்தையும் குறைத்துள்ளது.. அதன்படி, இந்த திட்டத்தின் மூலம், 15 முதல் 45 நிமிடங்களுக்குள் MSME நிறுவனங்கள் தேவையான கடன் தொகையை பெற முடியும்.

கடனுதவி: இதுகுறித்து SBI தலைவர் சி.எஸ். செட்டி சொல்லும்போது, "MSME Sahaj" திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான உடனடி கடனுதவியை வழங்குவது எளிமையாக இருப்பதோடு, தற்போதைய கடன் அளவு 5 கோடி ரூபாயிலிருந்து கூடுதலாக அதிகரிக்கப்படும். இது MSME நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கச் செய்யும் ஒரு முன்னேற்றமான திட்டமாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கடன் பெறும் செயல்முறையை மின்னணுவாக மாற்றி, அதன்மூலம் குறைந்த நேரத்தில் கடன் அனுமதியை பெற முடியும்.. தற்போது 22,542 கிளைகள் உள்ள நிலையில், விரைவில் மேலும் 600 கிளைகள் திறக்கப்படும்.. இதன்மூலம் MSME துறையில் புதிதாக தொடங்கிய தொழில்கள் மட்டுல்லாமல், ஏற்கனவே உள்ள நிறுவனங்களும் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். எஸ்பிஐயின் இந்த கடன் திட்டமானது, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி: 15 முதல் 45 நிமிடங்களுக்குள் MSME நிறுவனங்கள் தேவையான கடன் தொகையை பெற முடியும் என்ற அறிவிப்பானது, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தொழில் ஈடுபட்டு வருபவர்கள், புதிய தொழில் ஒன்றினை துவங்குவர்களுக்கு சில நேரங்களில் திடீரென பணத்தேவை ஏற்படும் என்பதால், அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உண்டாகலாம். இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில்தான், எஸ்பிஐ வங்கி, எம்.எஸ்.எம்.இ. சஹான் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இணைய வழியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தங்கள் ஜி.எஸ்.டி விற்பனை ரசீதுகளுக்கு எதிராக ரூ. 1 லட்சம் வரையிலான கடனை டிஜிட்டல் வாயிலாக 15 நிமிடங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.. கடனுக்கு விண்ணப்பித்தல் முதல் வழங்குதல் வரையிலான அனைத்து நடைமுறைகளும் தானியங்கி முறையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+