இந்தியா, பாகிஸ்தான் சண்டையில் மனிதநேயம்தான் ஜெயிக்க வேண்டும்- சிம்ரன் ஒரே போடு
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையில் விரைவில் இயல்பு சூழல் திரும்பும் என்று நம்புவதாக நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். மனிதநேயம் ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ள சிம்ரன், நாம் கடவுளிடம் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகள் மூலம் அழிக்கப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இந்திய எல்லையோர கிராமங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வைத்து தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதனை இந்திய பாதுகாப்பு படை வான் வெளியிலேயே வைத்து முறியடித்ததோடு, பயங்கரவாதிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் நடிகை சிம்ரன் கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இலங்கை அகதியாக சிம்ரன் நடித்திருந்தார். அன்பை வலியுறுத்தி வெளியான அந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் அதிகளவில் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சிம்ரன் பேசுகையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. எனது 30 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில், இந்த வெற்றி மிகவும் சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. கதை தான் பாஸ். கதை நன்றாக இருந்தால், ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
என்னுடன் நடித்த நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்து மட்டுமே கூற முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அறிவிக்கப்படாத போர் தொடர்பான கேள்விக்கு, இது கொஞ்சம் கடினமான சூழல்தான். நம்மால் கடவுளிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும். விரைவில் சூழல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறேன்.இறுதியாக மனித நேயம் ஜெயிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications