திருவாரூரில் தடையை மீறி ஹைட்ரோ கார்பன்.. ஸ்டாலின் உடனே தலையிட வேண்டும்! அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
சென்னை: மாநில அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாநில அரசின் தடையையும் மீறி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் நடப்பதாக அறிவியல் இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு பணிகளை நிறுத்த, மீத்தேன் எண்ணெய் எரிவாயு திட்டங்களை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications