தே.ஜ. கூட்டணியில் இருந்து அமமுக விலக நான் காரணம் இல்லை.. தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் மறுப்பு
சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே விலகினார். இதைத்தொடர்ந்து, அமமுக தலைவர் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளே காரணமே டிடிவி தினகரன் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான் காரணம் இல்லை என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் களம் அனல் பரக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில், கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
இன்று மானாமதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்ளிடம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்தவர். அப்படியிருக்கும் போது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?. மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியில் எங்களை அப்போது இணைத்தவர் அண்ணாமலை. இன்று ஏதோ டிடிவி தினகரனுடனும், ஓபிஎஸ்ஸுடனும் பேசத் தயார் என நயினார் நாகேந்திரன் சொல்கிறார்.
பழனிசாமி போதும் என நயினார் கருதுகிறார். அவர் அகங்காரத்துடன் ஆணவத்துடன் செயல்பட்டதால்தான் நாங்கள் வெளியேறினோம். ஓபிஎஸ்ஸுக்காக நான் ஏன் பேசுகிறேன் என என்னை கேள்வி எழுப்புகிறார். ஓபிஎஸ்ஸுக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவது?. இதனால் நாங்கள் என்டிஏ கூட்டணியில் தொடர்வதை நயினார் விரும்பவில்லை. எங்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வருகிறார். தமிழ்நாட்டில் இன்றைய மனநிலை நயினாருக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான் காரணம் இல்லை என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications