பெரியார் என்ன புரட்சியை செய்துவிட்டார்.. பொது விவாதத்திற்கு நான் தயார்.. சவால் விடுத்த சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார் என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், ஆரியத் தலைமையுடன் நட்புறவில் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

seeman periyar naam tamilar katchi

அதில் சீமான் பேசுகையில், திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று பேசினார்கள். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார், ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். ஆரியத்தோடு கைகோர்த்து கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும், அண்ணாவும் கூறினர். பெரியார் மணியம்மையை திருமணம் செய்த போது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார்.

1962 தேர்தலில் ராஜாஜியின் கட்சியுடன் அண்ணா கூட்டணி வைத்தார். பெரியாருக்கு மொழி, நாடு அபிமானம் கிடையாது. அதனால் அவர் மீது எங்களுக்கு அபிமானம் கிடையாது. வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். அம்பேத்கர், பெரியார் கொள்கைகள் ஒன்று என நிரூபிக்க என்னுடன் விவாதிக்க தயாரா?

பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெண்ணுரிமை பற்றி பேச என் தலைவனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. பாரதியார், வள்ளுவர் ஆகியோர் பெண்ணுரிமைக்காக பேசியுள்ளனர். ஆரியர் ஜெயலலிதாவிற்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டத்தை கொடுத்தவர் கி.வீரமணி. தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.


பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், யாராவது ஒருவர் பொதுத்தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா? தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என்று சொல்லும் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன். அப்படிதான் தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்திருக்கிறேன்.


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிமையை கொடுங்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து மட்டுமே 2 அமைச்சரவை எடுத்து கொள்கிறீர்கள். இது எப்படி சமூகநீதியாகும். இது தான் சனாதனம். வீட்டில் இருக்கும் சனாதனத்தை ஒழிக்காமல் வெளியில் வந்து சனாதனத்தை ஒழிப்பேன் என்றால் வேடிக்கையாக இருக்கிறது.எதன் பொருட்டு எனக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ, அதனை வைத்தே வகுத்து பிரித்து கொடுப்பதே சமூகநீதி என்று தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+