Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் மாறும்.. "அந்த" கூட்டணி மட்டும் உருவானால்.. கேம் ஓவர்.. எடப்பாடி மெகா திட்டம்! அப்போ திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பழைய வெற்றி கூட்டணி ஒன்றை உருவாக்க எடப்பாடி முயன்று வருவதாகவும், அந்த கூட்டணி மட்டும் உருவானால் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலையே மாறும் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

அதிமுக மெகா கூட்டணி அமைக்க போவதாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில்தான் தற்போது அதிமுக + பாஜக கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும் என்றார்.

அதன்பின் சிவி சண்முகம் திமுக - பாஜக கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஸர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார்.

தமிழ்நாட்டில் என்ன மாதிரியான கூட்டணி உருவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மூத்த பத்திரிகையாளர் மணி இது தொடர்பாக ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு..

பேட்டி

பேட்டி

கேள்வி: ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் போகவில்லை.. அது இன்னும் இருக்கிறது.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மட்டுமே எடப்பாடி விலகி இருக்கிறார் என்று பண்ருட்டி ராமசந்திரன் சொல்லி இருக்கிறாரே?

பதில்: இதெல்லாம் சட்ட ரீதியான பாயிண்ட்ஸ். இது குழப்பமான லீகல் விவரங்கள். அதில் கருத்து சொல்ல தரவுகள் தேவை. இது ஒரு அரசியல் பிரச்சனை. ஆனால் இதற்கு ஓபிஎஸ் நீதித்துறையின் தீர்வை எதிர்பார்க்கிறார். அவருக்கு இதில் தீர்வு கிடைக்காது. அப்படியே தீர்வு கிடைத்தாலும் அந்த தீர்வு நிலைக்காது. கடந்த முறையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, இது அரசியல் கட்சியின் உட்கட்சி மோதல். இதில் நாங்கள் என்ன செய்ய முடியும். உட்கட்சி மோதலில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கோர்ட் சொன்னது. அதன்பின் ஓபிஎஸ் வைத்த வாதத்தில் கட்சிக்குள் பை லாவை மீறிவிட்டனர் என்று கூறியதால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

வழக்கு

வழக்கு

உயர் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகளில் வேறு வேறு தீர்ப்புகள் வர தற்போது மீண்டும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. இந்த முறை 10 நாட்கள் வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம், 10 நாட்களில் இந்த பிரச்சனையின் வீரியம் குறையும் என்று கூறினார்கள். சில பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் காலம் தாழ்த்தும். பிரச்சனையின் வேகமும், கோபமும் குறையும் வரை காலம் தாழ்த்தும். அவர்களே சமாதானம் ஆகட்டும் என்று காலம் தாழ்த்தும். அதனால்தான் வழக்கை அவர்கள் தள்ளி வைத்து இருப்பார்கள்.

எதுவும் நடக்காது

எதுவும் நடக்காது

ஜனவரி 4ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும் பெரிதாக அதில் எதுவும் நடக்காது. வழக்கு தொடர்ந்து நீடிக்கும். சட்டப்படி ஓபிஎஸ் வலுவாக இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதிமுக பை லா குழப்பமாக இருக்கிறது. இது போன்ற சட்ட மோதல்களில் கட்சியில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள். கட்சி விதிகளை பிடித்து தொங்கும் நபர்கள் வெல்ல முடியும். ஜெயலலிதாவிற்கு இதே நடந்து இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஜெயலலிதா - ஓபிஎஸ் இடையே மோதல் இருக்கிறது. அப்போது ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்புவருகிறது . அவருக்கு சின்னம் போகிறது என்றே வைத்துக்கொள்வோம்.ஆனால் கட்சியில் மெஜாரிட்டி சப்போர்ட் ஜெயலலிதாவிற்குத்தானே இருக்கும்? அவரைத்தானே மக்கள் ஆதரிப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன்.. கட்சி மோதலில் சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

கேள்வி: எடப்பாடி தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டு இருக்கிறாரா?

பதில்: எடப்பாடி தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டு இருப்பது உண்மைதான். அவர் ஜெயலலிதா இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இன்று இருக்கும் ஆதரவை வைத்து பார்க்கும் போது எடப்பாடிக்கு ஓ பன்னீர்செல்வத்தை விட கொஞ்சம் கூடுதல் ஆதரவு உள்ளது. ஜெயலலிதா அளவிற்கு இல்லை என்றாலும் எடப்பாடிக்கு கொஞ்சம் ஆதரவு உள்ளது. ஆனால் தனியாக சின்னம் இல்லாமல் நின்று வெல்லும் அளவிற்கு எடப்பாடிக்கு பலம் இல்லை. இரட்டை இலை முடங்கினால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேருமே சைபர்கள்தான். இரண்டு பேருமே ஜெயிக்க முடியாது.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

திமுகவை யார் உறுதியாக எதிர்த்து நிற்கிறார்கள் அவர்கள் பக்கம்தான் கட்சி நிற்கிறது என்று அர்த்தம். திமுகவை எடப்பாடி எதிர்க்கும் அளவிற்கு ஏன் ஓபிஎஸ் எதிர்ப்பது இல்லை. ஆளும் தரப்பு எடப்பாடி ஆட்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு ஏன் ஓபிஎஸ் ஆட்களுக்கு நெருக்கடி கொடுப்பது இல்லை. ஏன் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மீது வழக்குகளை போடுவதே இல்லை. திமுக யாருக்கு மறைமுகமாக இருக்கிறது?அன்று அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்ற சென்ற போது அதை ஏன் திமுக தடுக்கவில்லை. பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறாரக்ள். 90 சதவிகிதம் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை பெரும்பாலான தொண்டர்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். சட்ட விதிகள், திமுக, பாஜக எல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் தொண்டர்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள்.

கூட்டணி

கூட்டணி

கேள்வி: பாஜக இல்லாமல் கூட்டணி வைக்க எடப்பாடி நினைக்கிறார் என்கிறார்கள்.. ஆனால் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தயாராக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: தயாராக மாட்டார்கள். கண்டிப்பாக தயாராக மாட்டார்கள். பாஜக கூட்டணியை விட்டு வெளியே வர எடப்பாடி நினைக்கிறார். அது உண்மை. முன்பு ஜெயலலிதா + காங்கிரஸ் கூட்டணி வைத்தது போல கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அந்த கூட்டணி இருந்தால் தமிழ்நாட்டில் திமுக தலை தூக்கவே முடியாது. அதுதான் வெற்றி கூட்டணி. 3 தேர்தல்களில் வென்ற வெற்றி கூட்டணி அது. திமுக எல்லாம் வெல்லவே முடியாது. அந்த கூட்டணியை உருவாக்கவே எடப்பாடி முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க விசிக, காங்கிரஸ் தயார் இல்லை. அவர்கள் திமுகவை விட்டு வர மாட்டார்கள். எடப்பாடியின் இந்த ஆசை ஈடேற போவது கிடையாது, என்று பத்திரிக்கையாளர் மணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+