Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு பெரிய வருமான வரி சலுகையா.. நீங்கள் கட்டப்பட்டு வரும் வீடு வாங்கினால்.. சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் வாங்கும் வீடு கட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்றால், இந்த வரிச் சலுகை உங்களுக்கு கிடைக்குமா என்று சந்தேகம் இருக்கும். இதுபற்றி வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் இதுபற்றி கூறுகையில், நீங்கள் உங்கள் பழைய வீட்டை விற்ற தேதியிலிருந்து, மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் வாங்கும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட வேண்டும். என்றார். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54 பற்றி முழுமையாக பார்ப்போம்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54 என்ன சொல்கிறது?

நீங்கள் குடியிருக்கும் ஒரு வீட்டை விற்று லாபம் ஈட்டினால், அந்த லாபத்தை (மூலதன ஆதாயத்தை) குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னொரு புதிய வீட்டைக் கட்டவோ அல்லது வாங்கவோ முதலீடு செய்தால், அந்த லாபத்தின் மீது வரி விலக்கு பெறலாம். இது தனிநபர்களுக்கும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கும் நிச்சயம் பொருந்தும்.

Income Tax house money

கட்டப்பட்டு வரும் அல்லது புதிய வீடு வாங்குவதற்கான விதிகள் என்ன:

உங்களில் நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும், நீங்கள் வாங்கும் வீடு கட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்றால், இந்த வரிச் சலுகை உங்களுக்கு கிடைக்குமா என்று சந்தேகம் இருக்கும். இதுபற்றி வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் இதுபற்றி கூறுகையில், நீங்கள் உங்கள் பழைய வீட்டை விற்ற தேதியிலிருந்து, மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் வாங்கும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட வேண்டும். ஒருவேளை, வீடு கட்டும் ஒப்பந்ததாரர் தவறுதலாகக் காலதாமதம் செய்து, வீட்டைக் கொடுக்க மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், உங்களுக்கு வரி விலக்கு கிடைக்காது என்று பயப்பட வேண்டாம். வாங்குபவர் (நீங்கள்) எந்தத் தவறும் செய்யாமல், ஒப்பந்ததாரரின் தாமதம் காரணமாக காலக்கெடு மீறப்பட்டால், நீங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த வரிச் சலுகையைப் பெற முடியும்.

எனவே நீங்கள் பழைய வீட்டை விற்கும்போது, புதிய வீட்டின் கட்டுமானத் திட்டத்தையும் கருத்தில் கொண்டு, புத்திசாலித்தனமாக ஒரு திட்டத்துடன் செயல்பட வேண்டும்.

முதலீட்டுக்கு அவகாசம் வேண்டுமா?

நீங்கள் வீட்டை விற்று விட்டீர்கள், ஆனால் உடனே உங்களால் புதிய வீடு வாங்க முடியவில்லை, அல்லது என்னால் சரியான நேரத்தில் முதலீடு செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்படுறீங்களா.. உங்களுக்காவே ஒரு மத்திய அரசின் திட்டம் உள்ளது. அது தான் மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்.

எதற்காக இந்தத் திட்டம் என்றால், நீண்ட கால சொத்தை (வீடு, நிலம்) விற்று கிடைத்த லாபத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் புதிய முதலீடு செய்ய முடியவில்லை என்றால், அந்தப் பணத்தை வரியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இந்தத் திட்டம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

எப்படி இதனை பயன்படுத்துவது?

உங்கள் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு முன்னால், நீங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தாத லாபப் பணத்தை இந்தக் மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தில் அதாவது ஆங்கிலத்ல் CGAS என்று கூறுவார்கள்.. இந்த கணக்கில் டெபாசிட் செய்து விட வேண்டும்.

பலன் என்ன?

இவ்வாறு டெபாசிட் செய்வதன் மூலம், நீங்கள் வரி விலக்கு பெறுவதற்கான தகுதியைப் தக்கவைக்க முடியும். பின்னர், இந்தக் கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்திப் புதிய வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ செய்யலாம். அப்போதும் உங்களுக்கு மத்திய அரசின் வரிச் சலுகை கிடைக்கும். முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது. நீங்கள் அந்தப் பணத்தை CGAS கணக்கில், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் டெபாசிட் செய்யத் தவறினால், நீங்கள் பின்னர் முதலீடு செய்தாலும், அந்த வரி விலக்கைப் பெற முடியாமல் போய்விடும். எனவே கவனமாக கையாளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+