மகளிர் உரிமை தொகை.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. இல்லைன்னா 1 ரூபாய் கூட கிடைக்காது.. கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பின்வரும் தவறுகளை செய்தால் பணம் கிடைக்காமல் போகலாம்.

1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.

3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.

4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.

5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பின்வரும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

1. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும்.

2. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

3. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

4. தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள்.

5. அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

எப்போது வழங்கப்படும்:

2 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்களை ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

மகளிர் உரிமை தொகை:

புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 2 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதால் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.

எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+