"சிவராத்திரி தூக்கம் ஏது.." பாடல் விவகாரம்! இளையராஜா நோட்டீஸுக்கு வனிதா பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை: தனது அனுமதியின்றி திரைப்படத்தில் பாடலைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவுக்கு, நடிகையும் தயாரிப்பாளருமான வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் உருவான 'மிஸஸ் & மிஸ்டர்' (Mrs & Mr) திரைப்படம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா, தனது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தில் தயாரித்திருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற 'சிவராத்திரி' பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். தனது அனுமதியின்றி இப்பாடலைப் பயன்படுத்தியதும், அதைத் தன் விருப்பப்படி மாற்றி அமைத்ததும் காப்புரிமைச் சட்டத்தை மீறிய செயல் என்று கூறி, இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. தனது பாடலை உடனடியாகப் படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. சரவணன், "இளையராஜாவின் பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதோடு, அவரது பெயரையும் படத்தில் சேர்த்துள்ளனர்" என்று வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த வனிதா தரப்பு வழக்கறிஞர், "எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்றே பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது; எனவே, இது காப்புரிமை மீறல் ஆகாது" என்று தெரிவித்தார். மேலும், மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு குறித்து வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
வனிதா விஜயகுமாரின் விளக்கம்:
முன்னதாக, இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், இதுகுறித்து விளக்கமளித்திருந்தார். அவர் கூறியதாவது:
"இந்தப் படத்திற்கு 'சிவராத்திரி' பாடல் தேவைப்பட்டபோது, நான் இளையராஜா அவர்களை நேரடியாகச் சந்தித்து அனுமதி கேட்டேன். அவரும் 'பயன்படுத்திக்கொள்' என்று வாய்மொழியாக அனுமதி அளித்தார். அதை நம்பியே பாடலை நாங்கள் பயன்படுத்தினோம்.
நான் சிறு வயதிலிருந்தே இளையராஜா அவர்களின் வீட்டில் வளர்ந்தவள். அவரது மனைவி ஜீவா அவர்கள், என்னை 'மகாலட்சுமி' என்றுதான் அழைப்பார். அந்த வீட்டில் நான் உரிமையுடன் விளையாடி, சாப்பிட்டு வளர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு அவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது வேதனையளிக்கிறது. நான் அவரிடம் கேட்காமல் பாடலைப் பயன்படுத்தியிருந்தால் நோட்டீஸ் அனுப்புவதில் நியாயம் உள்ளது. ஆனால், நான் அனுமதி கேட்டுத்தானே பயன்படுத்தினேன்.
நான் அந்த வீட்டிற்கு மருமகளாகச் செல்ல வேண்டியவள். இதற்கு மேல் பேசினால், பல உண்மைகளைப் பேச வேண்டியிருக்கும், அது சரியாக இருக்காது," என்று வனிதா தெரிவித்திருந்தார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications