இளையராஜா கையில், "மோடியின் சக்சஸ் புத்தகம்".. பக்கத்துலயே நிற்கிறது யார் பார்த்தீங்களா.. ஒரே பூரிப்பு
அர்ஜூன் சம்பத் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிகளை பெற்றுகொண்டார்
சென்னை: இளையராஜாவை நேரில் சந்தித்து, நரேந்திர மோடியின் எட்ட முடியாத எட்டு ஆண்டு கால சாதனைகள் புத்தகத்தினை வழங்கி உள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு கடலூரில் 2023ல் ஜனவரி மாதம் 21ம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவையும் நடத்தப்பட உள்ளன.. இதில் இந்து மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சாமியார்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

குப்புசாமி அனிதா
இதற்கான விளம்பர பணிகளை, சூட்டோடு சூட்டாக இந்து மக்கள் கட்சி தொடங்கி நடத்தி வருகிறது.. அந்தவகையில் சோஷியல் மீடியாவிலும் இதற்கான களை கட்ட தொடங்கிவிட்டது.. இந்த மாநாட்டுக்கு சினிமா, சோஷியல் மீடியா பிரபலங்களை அழைத்து சிறப்பிக்கவும் இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. சில நாட்களுக்கு முன்பு, பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி + அனிதா குப்புசாமி இருவரும், சனாதன இந்து தர்ம எழுச்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். இதனை அர்ஜுன் சம்பத்தும் தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்..

புஷ்பவனம் குப்புசாமி
அதில் பேசிய அந்த தம்பதியினர் "வணக்கம், ஜனவரி 29ம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் தொலைந்துபோன, தொலைந்து வருகின்ற நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரங்களை மீட்டெடுக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.எப்படியெல்லாம் மீட்டு எடுக்கலாம்? எப்படியெல்லாம் நம்முடைய பண்பாடு கலாச்சாரங்கள் திசைமாறி சென்றுகொண்டு இருக்கிறது? இது நம்முடைய அடையாளம். இதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதை மீட்டு எடுக்க வேண்டும். இது தொடர்பாக சொற்பொழிகள் நடைபெற உள்ளன. பேச்சரங்கம் நடைபெறுகிறது.. இந்த மாடர்ன் எல்லாம் நிலைத்து நிற்காது. தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைதான் நிலைத்து நிற்பவை" என்பன முதல் பல்வேறு விவரங்களை அதில் கூறியிருந்தனர்.

இளையராஜா
இந்நிலையில் இன்று, சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு அழைப்பிதழை, இசைஞானி இளையராஜாவிடம் வழங்கினார் அர்ஜுன் சம்பத்.. எம்பி இளையராஜாவை நேரில் சந்தித்த அர்ஜுன் சம்பத், பிரதமர் நரேந்திர மோடியின் எட்ட முடியாத எட்டு ஆண்டு கால சாதனைகள் புத்தகத்தினையும் அவருக்கு வழங்கினார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டையும் அர்ஜூன் சம்பத் பதிவிட்டுள்ளார். அதில், "சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு கடலூரில் ஜனவரி 21 அழைப்பிதழ் மற்றும் நரேந்திர மோடியின் எட்ட முடியாத எட்டு ஆண்டு கால சாதனைகள் புத்தகம் இசைஞானி இளையராஜா அய்யாவிடம் வழங்கி ஆசிகள் பெற்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் சேர்
இளையராஜா சோபாவில் உட்கார்ந்திருக்க, அவர் அருகில் அர்ஜுன் சம்பத் நின்று கொண்டிருக்கிறார்.. அவர் வழங்கிய அழைப்பிதழை, இளையராஜா ஆர்வமுடன் பிரித்து பார்க்கிறார்.. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. மேலும் சிலரோ, "ஏன், அவர் இளையராஜா உட்கார சொல்லலையா? பிளாஸ்டிக் சேர் எதுவும் இல்லையா? ஆமா, அது என்ன சாதனைகளா? அதுவும் எட்ட முடியாத அளவுக்கு சாதனையா? ஓ, பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏறியதை சொல்றீங்களா" என்று பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications