நவ 27, 28- இல் சென்னைக்கு மிக கனமழை.. இன்னும் லிஸ்ட்டில் இருக்கும் மாவட்டங்கள் என்ன?.. வானிலை மையம்
சென்னை: சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய இரு நாட்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து வருகிறார்கள்.
இடுப்பளவு தண்ணீரால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.

தென்மேற்கு வங்கக் கடல்
இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் தென் மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரமடைந்துள்ளது. இது புயலாக மாறாது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் மேலும் மேலும் மழை பெய்வதால் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

இரு நாட்கள்
இந்த நிலையில் 27 மற்றும் 28 ஆம் தேதி மழை குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மயிலாடு துறை, திருவாரூர், நாகை, தஞ்சை, காரைக்கால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம்
அது போல் வரும் 28ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அது போல் விழுப்புரம் , புதுவை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது.

திருவள்ளூர்
அதாவது 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு மேலும் கவலை தொற்றிக் கொண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications