வெறும் 40 ரூபாய் கட்டணம்.. வெளிநாடு செல்வோருக்கு வரமாக வரும் புதிய திட்டம்.. வெளியுறவுத்துறை சூப்பர்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை கிளை செயலகத்தின் தலைவரும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியுமான விஜயகுமார், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்வோர் தங்கள் ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலம் எளிதாக உறுதி செய்வதற்கான புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் தரப்படும் சம்பளத்தைவிட டபுள் சம்பளம் பல நாடுகளில் கிடைக்கிறது. அதேபோல் சில நாடுகளில் 3 மடங்கு, 4 மடங்கு சம்பளம் கிடைக்கிறது. அந்த வேலைக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். அதற்கு நன்னடைத்தை இருக்க வேண்டும். அதாவது வழக்குகளில் சிக்கக்கூடாது. குறிப்பாக குற்றவாளியாக மாறிவிடக்கூடாது. அப்படி நடந்தால் பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் ஏற்படும் வெளிநாடு வேலைக்கனவு போய்விடும்.

வெளிநாட்டு வேலை
பலர் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்புகிறார்கள். அங்கு படித்து அங்கேயே நல்ல வேலைக்கு சேர ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி செல்ல விரும்புவோருக்கு பல நாடுகள் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கின்றன. இதேபோல் வெளிநாடுகளில் தொழிலுக்காகவும் பலர் செல்கிறார்கள். இப்படி வெளிநாட செல்ல விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
ஆவணங்களின் உண்மை தன்மை
இதுபற்றி சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை கிளை செயலகத்தின் தலைவர் விஜயகுமார் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "வேலைக்காகவும், உயர்கல்வி படிப்பதற்காகவும், தொழில் சம்பந்தமாகவும் பலர் வெளிநாடு செல்கிறார்கள்.அப்படி வெளிநாடு செல்பவர்கள் தங்களது சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் உண்மைதன்மையை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் உறுதி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே இந்த ஆவணங்களை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளும்.
இ சன்ட் நடைமுறை
அதேநேரம் இந்த ஆவணங்களின் உண்மைதன்மையை உறுதி செய்யும் நடைமுறையை பொறுத்தமட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏஜென்சி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இந்திய வெளியுறவு அமைச்சத்துக்கு விண்ணப்பித்து அந்த சான்றிதழை பெற்று வந்தார்கள். இதனை எளிதாக்கும் வகையில் 'இ-சனட்' எனப்படும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடு செல்பவர்கள் 'இ-சனட்' எனப்படும் இணையதளம் மூலம் பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், கல்வி சான்றிதழ், தொழில் சம்பந்தமான சான்று போன்றவற்றை பதிவேற்றம் செய்து உண்மைத்தன்மை சான்றை மிக எளிதாக பெற முடியும்.
வெறும் 40 மட்டுமே கட்டணம்
உண்மைதன்மை சான்றுக்கு விண்ணப்பிக்க தபால் செலவான ரூ.40 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 7 வேலை நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இந்த சான்று விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அரசு இணையதளங்களில் இருக்கும்பட்சத்தில் அதன்மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அவ்வாறு அரசு இணையதளங்களில் அந்த ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாத நிலையில் மாநில அரசின் பொதுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்.
140 நாடுகள் ஏற்கின்றன
இந்த நடைமுறையின் நிலை குறித்த விவரத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமே அறிந்து கொள்ள முடியும். 140 நாடுகள் இந்த உண்மைதன்மை சான்றை ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடைமுறை மூலம் தேவையில்லாத கால விரயம் தடுக்கப்படும். எந்தவித சிரமமும் இல்லாமல் மிக எளிதாக உண்மை தன்மை சான்றிதழ் பெற முடியும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications