12 டூ 7.. அதுவும் வெறும் 3 மணி நேரத்தில்.. வெலவெலத்து போன ஓபிஎஸ்.. லபக்கென பிடித்த எடப்பாடி! போச்சே!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி தரப்பிற்கு நிர்வாகிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் நேற்று ஒரே நாளில் எடப்பாடி தரப்பிற்கான ஆதரவு கிராப் உச்சத்தை தொட்டுள்ளது.
எல்லா பாதையும் ரோமை நோக்கியே என்று சொல்வார்கள்.. இப்போது சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாதையும் எடப்பாடி ஹோமை நோக்கியே என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்.. அதிமுக நிர்வாகிகள் பலர் காரை எடுத்துக்கொண்டு எடப்பாடி வீட்டை நோக்கி நேற்று பிற்பகலில் இருந்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுக பொதுக்குழு நாளை நடக்க உள்ளது. பொதுக்குழுவிற்கு இதுவரை எந்த விதமான தடையும் விதிக்கப்படாத நிலையில் நாளை கிட்டத்தட்ட கூட்டம் நடப்பது உறுதியாகிவிட்டது.

கூட்டம்
நாளை கூட்டம் நடப்பது உறுதியாகி வரும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எப்படியும் பொதுக்குழு நடக்கும். பொதுக்குழு மட்டும் நடந்துவிட்டால் கண்டிப்பாக ஒற்றை தலைமை தீர்மானம் வரும். அதில் எடப்பாடிதான் பதவி ஏற்பார். இதனால் வேறு வழியின்றி பலரும் எடப்பாடி டீமிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளனர். நேற்று மட்டுமே ஏகப்பட்ட ஓபிஎஸ் டீம் நிர்வாகிகள் அப்படியே எடப்பாடி தரப்பிற்கு தாவி உள்ளனர்.

என்ன நடந்தது?
ஓபிஎஸ்ஸுக்கு நீண்ட கால ஆதரவாளர்களாக இருந்த பலரும் எடப்பாடிக்கு நேற்று ஒரே நாளில் ஆதரவு தந்தனர். நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இருவரும் எடப்பாடி கப்பலுக்கு தாவினர்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

ஆதரவு எவ்வளவு?
இதனால் ஓபிஎஸ் தரப்பிற்கு மொத்தமாக ஆதரவு சரிந்துள்ளது. அதன்படி ஓபிஎஸ் தரப்பிற்கு 74 மாவட்ட செயலாளர்களில் 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு மீதம் உள்ள 6 பேர் ஆதரவு தருவதாகவும். 4 பேர் நடுநிலையாக இருந்தாலும் ஓபிஎஸ் உடன்தான் நட்பாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2300 பேரில் 85 சதவிகிதம் பேர் எடப்பாடி பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏக்கள்
அதுமட்டுமின்றி எம்எல்ஏக்கள் தரப்பில் 55 எம்எல்ஏக்கள் எடப்பாடி ஆதரவில் இருப்பதாகவும் 4-6 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் டீமில் இருப்பதாகவும். 5 பேர் வரை இரண்டு பேருக்கும் எதிராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓபிஎஸ்ஸுக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக வைத்தியலிங்கம் கூறி இருந்தார், ஆனால் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. அவருக்கு வெறும் 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளிக்கிறார்கள் என்று அதிமுக தரப்பு கூறுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு வெலவெலத்து போய் இருக்கிறதாம்.

வெறும் 3 மணி நேரம்
நேற்று பிற்பகல் 1 மணி வரை ஓபிஎஸ்ஸுக்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்து வந்தனர். அதில் 5 பேர் திடீரென எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஆதரவு தர தொடங்கினர். வெறும் 3 மணி நேரத்தில்.. அதாவது மாலை 4 மணிக்குள் 5 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கேம்பிற்கு சென்றனர். இதனால் நேற்று மாலையே ஓபிஎஸ் தரப்பிற்கான ஆதரவு 7 ஆக குறைந்தது. இன்றும் வேளச்சேரி அசோக் எடப்பாடி கேம்பிற்கு ஆதரவு தர உள்ளதால், இது 6 ஆக குறையும். அதோடு ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் எடப்பாடி கேம்ப் வலைவீசி வருவதாக கூறப்படுகிறது. நாளை கூட்டம் நடக்கும் 95% மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கேம்பிற்கு செல்வார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications