1 - 5ம் வகுப்பு இறுதி தேர்வு தேதி மாற்றம்.. வெயில் காரணமாக முன்கூட்டியே பரீட்சை.. முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி முடிவடைய வேண்டிய தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும் தேர்வுக்கான காலஅட்டவணை வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் நெருங்கி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் கொடுமையாக உள்ளதால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொடூரமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஆண்டு இறுதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதாவது தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது முடிவடைந்து விட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்பது முடிந்துவிடும். இதனால் வெயிலை கருத்தில் கொண்டு மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 9 ம் தேதி தேர்வு தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வெயில் உக்கிரமாக இருப்பதால் இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 7 ம் தேதி தொடங்கும். ஆனால் ஏப்ரல் 17 ம் தேதியே முடிவடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தொடக்க கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛ தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9.4.2025 முதல் 21.4.2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு/ஆண்டு இறதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாகி உள்ளது. இதனால் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படியும், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வழிக்காட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும்'' என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது
அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி (திங்கட்கிழமை) 1, 2, 3, 4, 5 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வு நடக்கும். ஏப்ரல் 8 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 1 முதல் 5ம் வகுப்புக்கு விருப்ப மொழி தேர்வுகள் நடக்கும். ஏப்ரல் 9 ம் தேதி (புதன்கிழமை) ஆங்கில தேர்வும், ஏப்ரல் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) கணக்கு தேர்வும் நடக்கும். ஏப்ரல் 15ம் தேதி 4,5ம் வகுப்புகளுக்கு அறிவியல் தேர்வும், ஏப்ரல் 17 ம் தேதி 4, 5 வகுப்புகளுக்கு சமூக அறிவியல் தேர்வும் நடக்கும்.
இதில் 1, 2, 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 4, 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் தேர்வு என்பது நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications